Onam Special Recipes 2024: கேரளாவில் கொண்டாடப்படும் மிகவும் வண்ணமயமான பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இது புராண மன்னன் மகாபலி வீட்டிற்கு வந்ததைக் குறிக்கிறது. இது அறுவடை காலத்தில் 10 நாட்களுக்கு மேல் நீடித்து, புனிதமான திருவோண நாளில் முடிவடைகிறது. அதன் படி, இந்த ஆண்டு 10 நாள் கொண்டாட்டங்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முடிவடைகிறது. பாரம்பரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையில் நடனங்கள், யானை ஊர்வலங்கள், படகுப் போட்டி உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம்பெறும்.
ஓணம் சத்யா (What Is Onam Sadhya)
அதே சமயம், இந்த நாளில் வீடுகளில் ஓணம் சத்யா என்ற பிரமாண்டமான விருந்து இல்லாமல், இந்த விழா முழுமையடையாது. பொதுவாக ஓணம் சத்யா என்பது 25 க்கும் மேற்பட்ட உணவுகளைக் கொண்ட வாழை இலையில் பண்டிகை நேரத்தில் வழங்கப்படும் பாரம்பரிய பலவகை சைவ உணவு வகைகளைக் குறிக்கிறது. இது ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். அதே சமயம், இந்த ஆண்டு வரும் ஓணம் பண்டிகையை மறக்க முடியாததாக மாற்ற விரிவான இனிப்பு சுவையில், அருமையான வாழைப்பழ அல்வாவைத் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ulunthu Milk: உளுத்தங்கஞ்சி குடிச்சி போர் அடிச்சிடுச்சா? உளுத்தம்பருப்பு பால் இப்படி செஞ்சி குடிங்க!
வாழைப்பழ அல்வா தயார் செய்வது எப்படி?
ஓணத்தின் போது எளிமையான முறையில் வீட்டிலேயே வாழைப்பழ அல்வா தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
தேவையான பொருள்கள்
- பழுத்த வாழைப்பழங்கள் - 6
- சர்க்கரை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
- நெய் - 2 முதல் 3 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
- பாதாம் - தேவையான அளவு

வாழைப்பழ அல்வா செய்முறை
- முதலில் பழுத்த வாழைப்பழங்களைத் தோலுரித்து, மசித்துக் கொள்ள வேண்டும்.
- அடிகனமான கடாய் ஒன்றை எடுத்துக் கொண்டு, நெய்யைச் சூடாக்கி அதில் மசித்த வாழைப்பழங்களைச் சேர்க்க வேண்டும்.
- இதை மிதமான தீயில் கலவை ஒட்டாமல் கிளறி விட வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வாழைப்பழங்கள் பொன்னிறமாகும் வரை சமைக்க வேண்டும்.
- இதில் தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- 4-5 நிமிடங்களுக்குப் பிறகு, சர்க்கரையைச் சேர்த்து சர்க்கரை கரையும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
- அதன் பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
- இந்தக் கலவையை அல்வா பதத்திற்கு பிசுபிசுப்பாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- இதைக் குளிர்வித்து அல்லது சூடாக பரிமாறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க
வாழைப்பழ அல்வா செய்யும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
வாழைப்பழ அல்வா செய்வதற்கான சில எளிய குறிப்புகளைக் காணலாம்.
- வாழைப்பழ அல்வாவில் முதன்மையான பொருளாக வாழைப்பழம் உள்ளது. இதில் நேந்திரம் பழம் என்ற கேரளா வாழைப்பழம் இந்த ரெசிபி தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக அளவில் பெரியதாகவும், இனிப்பானதாகவும் இருக்கும். இவ்வாறு சரியான வாழைப்பழங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
- எந்தவொரு அல்வா தயார் செய்யவும், நெய் ஒரு அத்தியாவசியமான பொருளாகும். நெய் சேர்ப்பது ஹல்வாவை கடாயில் ஒட்டாமல் தடுக்க உதவுகிறது. தயாரிப்பைப் பொறுத்து நெய் இருப்பினும், அதிகளவிலான நெய்யைச் சேர்க்க வேண்டும்.
- ஹல்வா தயார் செய்யும் போது, கலவையைக் குறைந்த தீயில் கிளற வேண்டும். கட்டிகள் இல்லாத ஹல்வாவைத் தயார் செய்ய அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
- வாழைப்பழ ஹல்வாவை உருவாக்கும் போது பயன்படுத்தும் இனிப்பு வகையானது அதன் ஒட்டுமொத்த சுவை மற்றும் நிறத்தைத் தீர்மானிக்கிறது.
- வாழைப்பழ ஹல்வாவிற்கு கூடுதல் சுவையைத் தருவதற்கு ஏலக்காய், குங்குமப்பூ போன்ற மசாலாப் பொருள்களைப் பயன்படுத்தலாம். மேலும் நறுக்கிய உலர் பழங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை போன்ற நட்ஸ் வகைகளைச் சேர்க்கலாம்.

இவ்வாறு அருமையான சுவையில், சூப்பரான வாழைப்பழ ஹல்வாவை வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் ராகி பணியாரம்! காரம், இனிப்பு என இரு சுவையிலும் செய்யுங்க
Image Source: Freepik