$
How to Prepare Urad Dal Milk Recipe: தினமும் காலையில் காபி, டீ அருந்துவதையே பலரும் விரும்புகின்றனர். காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல வித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதை அறிந்தே சிலர் ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆரோக்கியமான பானங்களில் முதன்மையாக உளுத்தங்கஞ்சி அமைகிறது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய சிறந்த பானமாகும். உளுத்தங்கஞ்சியைத் தவிர, உளுந்தம் பருப்பு பால் தயார் செய்து அருந்துவதும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Soaked Almonds Benefits: டெயிலி காலையில் 10 ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?
உளுத்தம்பருப்பு பால் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- உளுத்தம் பருப்பு - 1 கப்
- வெல்லம் பவுடர் - 1 முதல் 1 1/4 கப்
- தண்ணீர் - 4 கப்
- ஏலக்காய் பவுடர்
- துருவிய தேங்காய்
- நொறுக்கப்பட்ட வறுத்த வேர்க்கடலை
- தேங்காய் பால் அல்லது பசும்பால் - 1/2 கப்

உளுத்தம்பருப்பு பால் செய்முறை
உளுத்தம்பருப்பு பால் குடிப்பது ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும். இதில் உளுத்தம்பருப்பு பால் எப்படி செய்வது மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
- முதலில் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- இது நன்கு ஊறிய பிறகு, மிக்ஸி ஜாரில் தண்ணீரை வடித்து விட்டு உளுந்தம் பருப்பை மட்டும் போட வேண்டும்.
- இதை சிறிது தண்ணீர் விட்டு உளுந்தம் பருப்பை நைசாக அரைக்க வேண்டும்.
- இதில் உளுந்த மாவு நைசான பதத்திற்கு இருக்க வேண்டும்.
- உளுத்தம் பருப்பு பால் தயார் செய்ய, அடி கனமாக உள்ள பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின், அதில் உளுந்து அளந்த அதே பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Lemon Honey water: எடை குறைய எலுமிச்சை தேன் நீரை இந்த நேரத்தில் குடிங்க..
- அதில் அரைத்து அரைத்து வைத்த உளுந்த மாவையும் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளலாம்.
- அதனை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் நன்கு கிண்டி விட வேண்டும்.
- இவ்வாறு செய்யும் போது உளுந்து நன்கு வேக வைக்க வேண்டும். உளுந்து வேக 10-லிருந்து, 15 நிமிடம் சரியாக இருக்கும்.
- இப்போது உளுந்து அளந்து அதை பாத்திரத்தில் ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இதில் தேவைக்கு ஏற்ப இனிப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
- இவ்வாறு நாட்டுச் சர்க்கரை சேர்த்ததும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு, ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.
- இப்போது சுவையான உளுந்தம் பால் ரெடி ஆகி விட்டது.
- இதன் சுவையை கூடுதலாக்க, வறுத்த நிலக்கடலையை நன்கு அரைத்து துருவிய தேங்காய் சிறிது சேர்த்து தேங்காய் பால் ஒரு கப் சேர்த்து பருகினால் கூடுதல் சுவையைத் தருகிறது.

உளுத்தம் பருப்பு பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- உளுத்தம் பருப்பு கருப்பு கிராம் என அழைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வளமான ஆதாரமாகும். இது ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
- உளுத்தம்பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் மலமிளக்கிய பண்பு காரணமாக குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் மலச்சிக்கலை நிர்வகிக்க உதவுகிறது.
- இதன் நார்ச்சத்துக்கள் இன்சுலின் சுரப்பு மற்றும் உணர்திறனை மேம்படுத்துவதால், உளுத்தம் பருப்பு நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும்.
இவ்வாறு உளுத்தம் பருப்பு பால் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Seeds: நீங்கள் குப்பையில் தூக்கிப்போடும் இந்த 6 விதைகளின் பயன்கள் தெரியுமா?
Image Source: Freepik