தமிழர்களின் உணவு முறையில் பிரித்து பார்க்க முடியாத உணவாக இருப்பது வடை மற்றும் அதன் வகைகளும். டீ கடையில் தொடங்கி விரத சாப்பாடு வரை அனைத்திலும் வடை இடம்பெறும். அப்பலம், வடை, பாயாசம் இருந்தால் அது விருந்து சாப்பாடு என்றுதான் கூறுகிறார்கள். மா, பலா, வாழை போல் சமைத்த உணவில் அப்பலம், வடை, பாயாசம் என்பதாகும்.
அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது வடை ஆகும். அதேபோல் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்களுக்கு வடை தான் ஒரு வேளை உணவாகவே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வடையில் பிரபலமான இரண்டு வகை என்னவென்று பார்த்தால், அது உளுந்து வடை மற்றும் பருப்பு வடை ஆகும்.
மேலும் படிக்க: செரிமானத்தை மெதுவாக்கி, நிறைவை அதிகரிக்கும் இந்த உணவுகளை சாப்பிடுங்க! நிபுணர் சொன்ன டிப்ஸ் இதோ
உளுந்து வடை, பருப்பு வடை எது சிறந்தது?
பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடை என்பது உளுந்து வடை மற்றும் பருப்பு வடை ஆகும். இதில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சிந்தித்து உண்டா, அதற்கான பதிலை பார்க்கலாம். முதலில் வடை என்பதை தரமான முறையில் சமைக்க வேண்டியது முக்கியம். இப்படி சமைக்கப்படும் எண்ணெயில் எது சிறந்தது என பார்க்கலாம்.
உளுந்து வடை ஆரோக்கிய நன்மைகள்
உளுந்தை ஊற வைத்து அறைத்து எடுக்கப்படும் மாவில் மிளகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி என அனைத்தையும் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- உளுந்து வடை எளிதாக செரிமானமாகக் கூடிய உணவாகும்.
- இது உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது.
- அதேபோல் உளுந்து வடை வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்பு வலி, எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
- அலைச்சல், அதிக பணிச் சுமைகளில் இருப்பவர்களுக்கு உளுந்து வடை சிறந்த பிரசாதமாகும்.
- உளுந்து வடையில் மிளகு சேர்த்திருப்பதால் ஜலதோஷம், மூக்கில் நீர் வடிதல், ஆஸ்துமா, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
- செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த வடை சிறந்த உணவாகும்.

பருப்பு வடை ஆரோக்கிய நன்மைகள்
பருப்பு வடையை பொறுத்தவரை இது பல வகையான பருப்புகள் மற்றும் மசாலா பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. துவரம் பருப்பு, கடலை பருப்பு, மசூர் பருப்பு என பல பருப்பு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. பொதுவாகவே பருப்பு என்றால் உடலுக்கு ஆரோக்கியம் தான்.
- பருப்பு ஆரோக்கியத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.
- பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதில் ஃபோலேட், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன.
- இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை குறைப்பவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும்.
- பருப்பில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை அபாயம் வராமல் குறைக்க உதவுகிறது.
- பருப்பு கெட்ட கொழுப்பை குறைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் படிக்க: என்னது.. 3 நாட்களில் 2 கிலோ குறைக்கலாமா.? நா சொல்லலங்க.. நிபுணரின் டிப்ஸ் இங்கே..
உளுந்து வடை Vs பருப்பு வடை., எது ஆரோக்கியத்திற்கு நல்லது?
இரண்டு வடையும் உடலுக்கு நல்லதுதான். அதுவும் இது தமிழக பாரம்பரிய உணவு முறையாக இருக்கிறது. இந்த இரண்டு வடையையும் சாப்பிடலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வடை தயாரிக்க பிரதான தேவை எண்ணெய் ஆகும். எனவே நீங்கள் சாப்பிடும் வடை தரமான மற்றும் ஆரோக்கியமான எண்ணெயில் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.