$
6 healthiest seeds to eat and their benefits: ஆரோக்கியமாக இருக்க, உணவில் ஆரோக்கியமான பொருட்களைச் சேர்ப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமாக இருக்க ஜங்க் ஃபுட்களை கைவிட்டு வெளிப்புற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள் என்ற உடன் அனைவரும் விலையுயர்ந்த உணவுகளை தான் குறிவைக்கிறார்கள். நாம் தேவையில்லை என குப்பையில் சில உணவுகளில் ஆகச்சிறந்த ஆரோக்கியங்கள் நிரம்பியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், நாம் கூறிக்கொண்டிருப்பது விதைகள் குறித்துதான். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில காய்கறிகள் பெரும் உதவியாக இருக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விதைகள்

பூசணி விதைகள்
பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. ஒரு கிண்ணத்தில் பழங்களில் 1 தேக்கரண்டி விதைகளை கலந்து இந்த விதைகளை உட்கொள்ளலாம்.
பெருஞ்சீரகம் விதைகள்
பெருஞ்சீரகம் விதைகள் மலச் சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்றை சுத்தப்படுத்த உதவும். தினமும் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் தேநீர் அருந்தலாம்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் ஆகச்சிறந்த பல நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் செலினியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கு நமக்கு ஏராளமான ஆற்றல் தேவை. இந்த ஆற்றலை சூரிய காந்தி விதைகள் மூலம் பெறலாம். அதோடு தசைகளை உருவாக்குதல், இரத்தம் பரவுதல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.
எள் விதைகள்
எள் விதையில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது. எள் விதைகளை ரொட்டி அல்லது காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம். எலும்பு ஆரோக்கியம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சரிசெய்து உடல் ஆரோக்கியத்திற்கு எள் விதை பயனுள்ளதாக இருக்கும்.
ஆலிவ் விதைகள்
ஆலிவ் விதைகளில் இரும்புச்சத்து உள்ளது, இது முடி உதிர்வை குறைக்கிறது. தேங்காய் நீரில் 1/4 தேக்கரண்டி ஆலிவ் விதைகளை கலந்து குடிக்கலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் உள்ளிட்ட பலவித ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்ய இது உதவுகிறது. குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த விதைகள் உதவும்.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை இழப்புக்கு சியா விதைகள் பெரும் உதவியாக இருக்கும். அதேபோல் எலும்பு ஆரோக்கியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம், இரத்த குளுக்கோஸ் சரிசெய்ய என பல நன்மைகளுக்கு இது உதவுகிறது.
Image Source: FreePik