Garlic Oil Benefits: இதய ஆரோக்கியம் முதல் முடி உதிர்வு வரை! இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்

  • SHARE
  • FOLLOW
Garlic Oil Benefits: இதய ஆரோக்கியம் முதல் முடி உதிர்வு வரை! இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்

பூண்டு எண்ணெய் ஊட்டச்சத்துக்கள்

பூண்டு எண்ணெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலின் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மேலும், இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளும் நிறைந்துள்ளது. இது தோல், முடி மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு உதவுகிறது. இத்தகைய பல்வேறு பண்புகள் நிறைந்த பூண்டு எண்ணெய் தரும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Best Cooking Oil: நீங்கள் எந்த சமையல் எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்? எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

பூண்டு எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

சளி, காய்ச்சலைத் தடுக்க

ஆய்வுகளில் பூண்டு எண்ணெய் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. நோய்களில் இருந்து விரைவாக நிவாரணம் பெறவும் உதவுகிறது. இதற்கு பூண்டு எண்ணெயில் உள்ள ஆலின் என்ற செயலில் உள்ள மூலப்பொருளே காரணமாகும். இவை உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. எனவே சூடான குளியல் எடுக்கும் முன்பாக, கடுகு எண்ணெயுடன் இந்த எண்ணெயைத் தேய்த்து பயன்படுத்துவது சிறந்த முடிவுகளைத் தருகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

ஆய்வு ஒன்றில் பூண்டு எண்ணெயை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. பூண்டு எண்ணெய் கந்தக கலவைகளால் செறிவூட்டப்பட்டிருப்பதால் இவை இதய நோய் அபாயத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இது இதய நோய்க்கு முக்கிய காரணமாக விளங்கும் சமநிலையற்ற இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற

பூண்டு எண்ணெயைப் பயன்படுத்துவது பற்களில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதற்கு இந்த எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளே காரணமாகும். இந்த பூண்டு எண்ணெயைப் பயன்படுத்துவது பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், வலிமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil Benefits: தேங்காய் எண்ணெயின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

முகப்பருவைத் தவிர்க்க பூண்டு எண்ணெய்

சருமத்தின் மேற்பரப்பில் பாக்டீரியாவை சிக்க வைத்து, முகப்பருவை ஏற்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில், பூண்டு எண்ணெயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கக் கூடியதாக அமைகிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் முகப்பருவுக்கு உதவுகிறது. இந்த எண்ணெயை கற்றாழையுடன் நீர்த்து, முகப்பருவில் தடவலாம். குறிப்பாக, இது தொற்று மற்றும் சீழ் பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கலவையே காரணமாகும். இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, பருக்களைக் குறைக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை சருமத்திற்கு பயனுள்ளகலவையாகும்.

முடி ஆரோக்கியத்திற்கு

பூண்டு எண்ணெயில் பி-6, சி, மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் பாக்டீரியாக்களை அழித்து, கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் சுத்தமான மற்றும் பொடுகு இல்லாத உச்சந்தலைக்கு வழிவகுக்கிறது. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துவதாகவு, முடி உதிர்வைத் தடுக்கவும் உதவுகிறது. எனினும், நீர்த்த பூண்டு எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், முழு தலையிலும் பயன்படுத்தும் முன்னதாக மணிக்கட்டுப் பகுதியின் உட்புறத்தில் ஒரு சிறிய அளவைப் பயன்படுத்தி பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.

இவ்வாறு பூண்டு எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: தப்பித்தவறி கூட இந்த எண்ணெயில் சமையல் செய்யாதீங்க… உயிருக்கே ஆபத்தாகலாம்!

Image Source: Freepik

Read Next

Drumstick: முருங்கைக்காயின் தன்மை என்ன? யார் சாப்பிடணும்? யார் சாப்பிடக்கூடாது?

Disclaimer

குறிச்சொற்கள்