Coconut Oil Benefits: தேங்காய் எண்ணெயின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Coconut Oil Benefits: தேங்காய் எண்ணெயின் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!

இதன் ஆரோக்கிய நன்மைகளை நன்றாக தெரிந்ததால் தான் கேரளாவில் இந்த எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் தேங்காய் எண்ணெய் உடலில் சேர்ந்த பிறகு கொழுப்பாக சேராது. இது நேரடியாக கல்லீரலை அடைந்து ஆற்றலை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது.

தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கு மாய்ஸ்சரைசராகவும் பயன்படுகிறது. இப்படி முடி முதல் அடி வரை உடலுக்கு தேங்காய் எண்ணெய் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என அறிந்து கொள்ளலாம்…

1.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:

தேங்காய் எண்ணெயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCT) உள்ளது. இவை குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகின்றன. மேலும்எம்சிடி எண்ணெய்யின் சங்கிலி தொடர் குறைவாக இருப்பதால் நேராக செரிமானத்திற்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் கல்லீரக்குச் செல்கிறது. இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் நேரடியாக கிடைக்கிறது.

இதையும் படிங்க: Thyroid Weight Loss: தைராய்டு நோயாளிகளே.. இவற்றை சாப்பிட்டால் சீக்கிரம் உடல் எடை குறையும்!

2009 ஆம் ஆண்டு அனிமல் ஸ்டடீஸில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, தேங்காய் எண்ணெயில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு இன்சுலின் ஸ்பைக்கை தடுக்கிறது. இது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதை கண்டறிந்துள்ளது.

2.கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கும்:

தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் தைராய்டு/வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மெதுவாக்க உதவுகிறது. இதிலுள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் எடை குறைப்பிற்கும் உதவுகின்றன.

3.தொற்றுகளை எதிர்த்துப் போராடும்:

தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது, மேலும் உடல் லாரிக் அமிலத்தை மோனோலாரினாக மாற்றுகிறது, இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் வளரும் பாக்டீரியாக்களைக் கொல்லும் திறன் கொண்டதாகும்.

இதையும் படிங்க: Vegan Diet: வீகன் டயட் இருக்கீங்களா?… நீங்கள் சாப்பிட வேண்டிய புரத உணவுகள் எவை?

4.கொலஸ்ட்ராலை குறைக்கிறது:

தேங்காய் எண்ணெய் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. அதாவது தேங்காய் எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பை ப்ரெக்னெனோலோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனாக மாற்றுகிறது. இந்த செயல்முறை அதிக கொலஸ்ட்ராலை கரைக்கிறது.

5.கல்லீரல் நோயைத் தடுக்கும்:

கல்லீரல் பிரச்சனைகளுக்கு தேங்காய் எண்ணெய் நல்ல தேர்வாகும். Wiley Online Library மூலம் எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெயை உட்கொண்ட எலிகளின் ஆரோக்கியம் 4 வாரங்களுக்கு மேம்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் தொடர்ந்து தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளலாம்.

Read Next

Egg With Milk Benefits: பச்சை முட்டையை பாலில் கலந்து குடித்தால், உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

Disclaimer