நீரிழிவு முதல் மன அழுத்தத்தைக் குறைப்பது வரை.. சந்தன எண்ணெயின் அற்புத நன்மைகள் இதோ

Health benefits of sandalwood essential oil: உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் வகையில் சந்தன எண்ணெய் அமைகிறது. இது உடலில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிய தீர்வாக அமைகிறது. இதில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சந்தன எண்ணெய் என்ன வகையான நன்மைகளைத் தருகிறது என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நீரிழிவு முதல் மன அழுத்தத்தைக் குறைப்பது வரை.. சந்தன எண்ணெயின் அற்புத நன்மைகள் இதோ

How to use sandalwood oil for health: அன்றாட வாழ்வில் இயற்கையாக கிடைக்கும் சில பொருள்களைக் கொண்டு நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அவ்வாறு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் சந்தனம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. சாண்டலம் ஆல்பம் (இந்திய சந்தனம்) மற்றும் சாண்டலம் ஸ்பிகேட்டம் (ஆஸ்திரேலிய சந்தனம்) போன்ற சந்தன மரங்களிலிருந்து வெட்டப்பட்ட சிப்ஸ் மற்றும் பில்லெட்டுகளின் நீராவி வடித்தல் மூலம் சந்தன எண்ணெய் பெறப்படுகிறது. அதன் படி, சரும பராமரிப்பு, அழகு மற்றும் ஆரோக்கியம் என அனைத்திற்கும் சந்தனம் ஒரு பழங்கால மருந்தாக இருந்து வருகிறது.

குறிப்பாக, சந்தன எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்தை குளிர்விப்பதுடன், சிவத்தல் மற்றும் எரிச்சல் போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. இது தவிர, சருமத்திற்குத் தேவையான நீரேற்றத்தை வழங்கவும் இது பெரிதும் உதவுகிறது. மேலும் வெடிப்புகளைத் தடுக்கவும், வறண்ட திட்டுகளைக் குறைக்கவும், சரும அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. சந்தன எண்ணெயைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இதன் அமைதியான நறுமணம் சிறந்த தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இதில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சந்தன எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரே இரவில் பருக்களை விரட்ட.. அற்புதமான வீட்டு வைத்தியம் இங்கே.!

சந்தன எண்ணெயின் பண்புகள்

தேசிய சுகாதார நிறுவனங்களில் (NIH) வெளியிடப்பட்ட சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தோல் மருத்துவம், வெனரியாலஜி மற்றும் தொழுநோய் துறையின் ஆராய்ச்சியின் படி, சந்தன எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வானது ஆல்பா-சாண்டலோலின் வீக்கத்தைக் குறைப்பதாகவும், நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், புற்றுநோய் செல் வளர்ச்சியைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சந்தன எண்ணெயானது நவீன தோல் மற்றும் சிகிச்சை பயன்பாடுகளில் ஒரு நம்பிக்கைக்குரிய மூலப்பொருளாக அமைகிறது.

சந்தன எண்ணெய் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தரும் நன்மைகள்

உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் சந்தன எண்ணெய் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இயற்கையான குளிர்ச்சி தரும் பொருளாக

சந்தனத்தைப் பயன்படுத்துவது வெப்பம் தொடர்பான சருமப் பிரச்சினைகளைத் தணிக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வீக்கம், சிவத்தல், எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, மந்தமான சருமத்திற்கு அழகு மருந்தாக சந்தன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது இயற்கையான குளிர்ச்சியூட்டும் பொருளாக பயன்படுகிறது.

வீக்கத்தை எதிர்த்துப் போராட

சந்தன எண்ணெயில் ஆல்பா-சாண்டலோல் உள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ் போன்ற தோல் நிலைகளை நிர்வகிக்கவும் உதவுகிறது. சில ஆய்வுகளின் படி, சந்தன எண்ணெய் மேற்பூச்சு அழற்சி எதிர்ப்பு சிகிச்சைகளில் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சரும ஆரோக்கியத்திற்கு

சந்தன எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் சந்தன எண்ணெய் மருக்கள், வைரஸ் தொற்றுகள் மற்றும் தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. எனவே இது தெளிவான, ஆரோக்கியமான சருமத்திற்கான மூலிகை சரும பராமரிப்பு சூத்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sandalwood For Skin: கோடை கால சரும பிரச்சனைகளை விரட்ட… இந்த இரண்டு பொருட்கள் போதும்!

இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த

இந்த எண்ணெயில் ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது இரத்த சர்க்கரையை குறைப்பதில் மிகவும் பங்கு வகிக்கிறது. சில ஆய்வுகளின் படி, சந்தன எண்ணெயில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது என்றும் கூறுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த

சந்தன எண்ணெயைப் பயன்படுத்துவதால் மூளையின் செயல்பாடு மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. இது மன அழுத்தம் தொடர்பான கோளாறுகளை நிர்வகிக்கவும், மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

புற்றுநோயை எதிர்த்துப் போராட

ஆய்வு ஒன்றில், ஆல்பா-சாண்டலோல் புற்றுநோய் செல் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் வாய்வழி, மார்பக, புரோஸ்டேட் மற்றும் தோல் புற்றுநோய்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. எனினும், இதன் செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மனதை அமைதிப்படுத்த

சந்தன எண்ணெயில் காணப்படும் இனிமையான நறுமணம் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது தளர்வு மற்றும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிப்பதற்கான நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது இயற்கையான மனநிலை ஊக்கியாகவும் செயல்படுகிறது.

சந்தன எண்ணெயில் நிறைந்திருக்கும் இயற்கையான பண்புகள் இது போன்ற ஏராளமான உடல் மற்றும் மனநல பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Sandalwood Powder: மழைக்காலத்தில் சந்தனப் பொடியை முகத்தில் தடவினால் இந்த 4 பிரச்சனைகள் தீரும்!

Image Source: Freepik

Read Next

காலை எழுந்தவுடன் அசிடிட்டியால் அவதியா? விரைவில் நிவாரணம் பெற உதவும் வீட்டு வைத்தியம் இங்கே

Disclaimer