Mookirattai keerai: அற்புத நன்மைகளை அள்ளித் தரும் மூக்கிரட்டை கீரை! இது தெரிஞ்சா நீங்க சாப்பிடாம இருக்க மாட்டீங்க

Medicinal uses in mookirattai leaves: உடலைப் பாதிக்கக் கூடிய பல்வேறு பிரச்சனைகளைச் சரி செய்வதில் சில மூலிகைகள் உதவுகின்றன. அவ்வாறு அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய மூலிகைகளில் ஒன்றாக மூக்கிரட்டை அமைகிறது. இது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Mookirattai keerai: அற்புத நன்மைகளை அள்ளித் தரும் மூக்கிரட்டை கீரை! இது தெரிஞ்சா நீங்க சாப்பிடாம இருக்க மாட்டீங்க


Mookirattai keerai health benefits in tamil: அன்றாட உணவில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், இலைகள், கீரைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருள்களைச் சேர்ப்பது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கீரை வகைகள் முக்கிய பங்களிக்கிறது. பொதுவாக, ஏராளமான கீரை வகைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இதை நம் அன்றாட வாழ்க்கையில் சேர்ப்பதன் மூலம் பலதரப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மூக்கிரட்டை கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

மூக்கிரட்டை கீரையின் அறிவியல் பெயர் போயர்ஹேவியா டிஃப்யூசா ஆகும். இந்த கீரையானது நிகீடாஜினேகி என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது இந்தியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. மேலும், இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்த மூக்கிரட்டையின் இலை, வேர், தண்டு என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் நிறைந்ததாகும். இது வயல் வரப்புகள், தோட்டங்கள், கிணற்றடி எங்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரையாகும். இதில் மூக்கிரட்டை கீரையின் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Spinach juice benefits: காலை எழுந்ததும் கீரை ஸ்மூத்தி குடிப்பதில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா?

மூக்கிரட்டை கீரையானது தரையோடு படந்து வளரக்கூடியதாகும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் இலைகளானது பச்சை நிறத்திலும், கீழ்ப்புறத்தில் வெளிறிய நிறத்திலும் கணப்படும். இதன் வேர்கள் பூமிக்குள் காணப்படும். மூக்கிரட்டையில் ரெடினாய்டுகள், லிக்னன்கள் மற்றும் அராசிடிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளது.

முந்தைய காலங்களில் நமது முன்னோர்களால் இது மருந்தாக எடுக்காமல் உணவாக சேர்க்கப்பட்டது. கலவை கீரைகள் என்ற பெயரில் இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவில் எடுத்து, கீரை மசியலில் சேர்த்து உட்கொள்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மூக்கிரட்டை கீரையின் ஊட்டச்சத்துக்கள்

மூக்கிரட்டை கீரையானது, பிற கீரைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்களைப் போன்றே வைட்டமின்கள் ஏ,பி, சி, நார்ச்சத்து, சுண்ணாம்புசத்து, தாதுக்கள் போன்றவை காணபப்டுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மற்றும் தாவர மூலக்கூறுகளான சாந்தோன்கள், லிக்னான், அராகிடிக் அமிலம் போன்றவையே மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றதாக அமைகிறது.

மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சிறுநீரககக் கற்கள் பிரச்சனை நீங்க

மூக்கிரட்டை கீரையானது பித்தப்பை கல், சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. இது உடலில் ஏற்படும் வாதம் சம்பந்தமான நோய்களை நீக்க உதவுகிறது. மேலும், மூளைக்கு ஆற்றலை அழித்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. கீழாநெல்லியுடன், மூக்கிரட்டை கீரையைச் சேர்த்து உட்கொள்வது மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும், முடக்கத்தான் கீரையுடன் மூக்கிரட்டை கீரையை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி பிரச்னையை சரி செய்யலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த கீரை

மூக்கிரட்டை கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது தேவையில்லாத ஆக்ஸிஜன்களை உடலிலிருந்து அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த இலைகள் கண்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், மலட்டுத்தன்மையைப் போக்கவும் உதவுகிறது. வீக்கம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த மூக்கிரட்டை கீரையை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Manathakkali palam benefits: மகத்துவம் நிறைந்த மணத்தக்காளி பழம்! இது தெரிஞ்சா நீங்க தினமும் சாப்பிடுவீங்க

நீரிழிவு நோயாளிகளுக்கு முக்கீரட்டை கீரை

உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்துவதில் மூக்கிரட்டை கீரை பெரிதும் நன்மை பயக்கும். எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. மூக்கிரட்டை இலைகளின் சாற்றை எடுத்து வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கலாம். இது இன்சுலின் அளவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் முக்கீரட்டை சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை நீங்க முக்கீரட்டை கீரை

மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் செரிமானக் கோளாறைக் குறைப்பதில் முக்கீரட்டை கீரை உதவுகிறது. இவை சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி சிறப்புடன் செயல்பட உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலிலிருந்து கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் இந்த கீரை சிறந்த தேர்வாகும். மேலும் இது இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.

மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை

  • மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து, பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம்.
  • மூக்கிரட்டை வேரோடு மிளகு சேர்த்து, விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி அரை ஸ்பூன் அளவு பருகலாம்.
  • இதன் வேர்களை காயவைத்து, பொடியாக்கி, சுடுநீரில் கலந்து குடிப்பதன் மூலம் கண்கள் சம்பந்தமான நோய்களைத் தீர்த்து விடலாம்.
  • மூக்கிரட்டை பொடியை எடுத்துக் கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற ஏராளமான நன்மைகளைத் தரும் மூக்கிரட்டை கீரையை மருத்துவரின் ஆலோசனைப் படி, அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Pulicha Keerai: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் புளிச்ச கீரை.!

Image Source: Freepik

Read Next

தசை வலிமை முதல்.. நீரிழிவு மேலாண்மை வரை.. முளைகட்டிய கொண்டைக்கடலை செய்யும் அற்புதங்கள் இங்கே..

Disclaimer