
இந்தியாவில் சந்தனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய சடங்குகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பொதுவாக சந்தனப் பொடி முகத்தில் பயன்படுத்தப்படும் போதிலும், சந்தன எண்ணெய் (Sandalwood Oil) கூட அதே அளவு நன்மை தரக்கூடியது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
இருப்பினும், பலருக்கும் ஒரு பொதுவான சந்தேகம் உள்ளது — “சந்தன எண்ணெயை நேரடியாக சருமத்தில் தடவலாமா?” என்ற கேள்விக்கு ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஷ்ரே சர்மா அளித்த விளக்கம் இதோ.
சந்தன எண்ணெயை நேரடியாக சருமத்தில் தடவலாமா?
டாக்டர் ஷ்ரே சர்மாவின் கூற்றுப்படி, சந்தன எண்ணெயை நேரடியாக சருமத்தில் தடவலாம், ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன. இது சருமத்தை குளிர்ச்சியூட்டுவதோடு, சீராகவும் ஒளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இது மிகுந்த செறிவுடைய எண்ணெய் என்பதால், உணர்திறன் அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள் சிறிதளவு பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது முக்கியம்.
யார் பயன்படுத்தக் கூடாது?
உங்களுக்கு உணர்திறன் மிகுந்த சருமம், அல்லது சந்தன மரத்துக்கு ஒவ்வாமை இருந்தால், நேரடியாக பயன்படுத்த வேண்டாம். பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மணிக்கட்டில் அல்லது காதுக்குப் பின்னால் ஒரு துளி பூசி 24 மணி நேரம் காத்திருந்து எரிச்சல், சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் தவிர்க்கவும்.
சிறந்த மாற்று வழி — 2–3 சொட்டு சந்தன எண்ணெயை தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய் உடன் கலக்கி பயன்படுத்தலாம். இது தீவிரத்தைக் குறைத்து சருமத்தில் மென்மையாகச் செயல்படும்.
வறண்ட சருமத்திற்கு சந்தன எண்ணெயின் நன்மைகள்
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு சந்தன எண்ணெய் இயற்கையான தீர்வாகும். டாக்டர் ஷ்ரே சர்மா கூறுவதுபடி, இது சரும ஈரப்பதத்தை பராமரிக்கவும், வறட்சியையும் தடுக்கவும் உதவுகிறது. படுக்கைக்கு முன் சில சொட்டு எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்வது சருமத்தை நன்றாகத் தளர்த்தி, மறுநாள் வரை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.
முகத்தில் சந்தன எண்ணெயை பயன்படுத்தும் சரியான முறைகள்
ஃபேஸ் பேக்கில் கலந்தல்
சந்தனப் பொடி + ரோஸ் வாட்டர் + சில துளிகள் சந்தன எண்ணெய் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவி, மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். இது சருமத்தை பிரகாசமாகவும் சீராகவும் வைத்திருக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் கலத்தல்
2–3 சொட்டு சந்தன எண்ணெயை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கி முகம் அல்லது உடலில் மசாஜ் செய்யலாம். இது சருமத்தை ஈரமாக வைத்திருப்பதோடு, குளிர்ச்சியையும் வழங்கும்.
இறுதியாக..
சந்தன எண்ணெய் என்பது இயற்கையான மற்றும் ஆயுர்வேத அடிப்படையிலான அழகு பராமரிப்பு தீர்வு. சரியான முறையில் பயன்படுத்தினால் இது முகப்பரு, வறண்ட சருமம், கருமை போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும். எனினும், ஒவ்வொருவரின் சருமமும் தனித்துவமானது என்பதால், பயன்படுத்தும் முன் சிறிய பகுதி சோதனை செய்யுதல் அவசியம்.
Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களாகும். உங்களுக்கு ஏற்கனவே சரும பிரச்சனை அல்லது ஒவ்வாமை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சந்தன எண்ணெயை பயன்படுத்தவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 09, 2025 12:05 IST
Modified By : Ishvarya GurumurthyNov 09, 2025 12:05 IST
Published By : Ishvarya Gurumurthy