$
How to Make Ragi Paniyaram Recipe: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ராகியில் நிறைந்து காணப்படுகிறது. ராகியில் இட்லி, தோசை, அடை போன்ற பல்வேறு வழிகளில் உட்கொள்வர். ஆனால், ராகியில் பணியாரம் செய்து சாப்பிட்டதுண்டா? அருமையான சுவையில் இட்லி, தோசை செய்வதைப் போல, எளிமையான முறையில் குழிப்பணியாரம் செய்யலாம். அதிலும் அவரவர்களுக்கு ஏற்றவாறு இனிப்பு மற்றும் காரம் சுவைகளில் பணியாரத்தை செய்யலாம். அதன் படி, இனிப்பு பணியாரம் செய்ய பனைவெல்லம் அல்லது வெல்லத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
பனைவெல்லம் அல்லது வெல்லத்திலிருந்து பாகு காய்ச்சி மாவில் கலந்து பணியாரம் செய்யலாம். இதை இரும்பு பணியார சட்டியில் செய்தால், அதிக எண்ணெய் தேவைப்படலாம். ஆனால், நான்ஸ்டிக் பேன்களில் செய்தால் குறைந்த அளவு எண்ணெ ஊற்றினாலே போதும். இவ்வாறு மொறுமொறுப்பான பணியாரத்தை தயாராகி விடும். ஆனால் இது உடலுக்கு மிகவும் கேடுகளை கொண்டு வரலாம். எனவே பெரும்பாலும் பாரம்பரிய இரும்பு பாத்திரங்களை உபயோகப்படுத்தலாம். இதில் அருமையான சுவையானயில் ராகி பணியாரம் செய்ய தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Jam: குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் ஜாம் எப்படி செய்யணும் தெரியுமா? இதோ ரெசிபி!
ராகி பணியாரம் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- ராகி இட்லி மாவு - 2 கப்
- (வழக்கமான இட்லி மாவில் ராகி மாவைக் கலக்க வேண்டும். இதில் 3:1:1 என்ற விகிதத்தில் அரிசி, உளுந்து, ராகி மூன்றையும் கலந்து ஊறவைத்து சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்)
- எண்ணெய் - தேவையான அளவு
- தாளிக்க தேவையானவை
- பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கிறது)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிறது)
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – ஒரு ஸ்பூன்
- துருவிய தேங்காய் – ஒரு கப்
- துருவிய கேரட் – ஒரு கப்
- பெருங்காயம் – சிறிதளவு
(இதில் விருப்பப்பட்டால் கேரட் மற்றும் தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிடில் விட்டுவிடலாம்).

ராகி பணியாரம் செய்முறை
- முதலில் கடாய் ஒன்றில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போன்றவற்றைச் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பிறகு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- இவை பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- ராகி மாவில் இந்த தாளிப்பை சேர்த்து கலக்கவேண்டும். பிறகு விரும்பினால், துருவிய கேரட் மற்றும் தேங்காயையும் சேர்த்து நன்றாக மாவை கலந்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Ulundu Choru Recipe: எலும்புகளை வலுவாக்கும் உளுந்து சாதம் எப்படி செய்யணும் தெரியுமா?
- பிறகு பணியாரச் சட்டியை சூடாக்கி, அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு மாவையும் ஒவ்வொரு குழியிலும் சேர்க்கலாம். இதை குறைவான தீயில் வைத்து வேகவிடவேண்டும்.
- பணியாரத்தை ஊற்றிய பிறகு, அதை மூடி போட்டு மூடி வைத்து வேக வைக்கும் போது அனைத்தும் சரியாக ஒரே அளவில் வேக வைக்கலாம்.
- அதன் பிறகு, ஒரு புறத்தில் பணியார குத்தியால் திருப்பி விட்டு, மற்றொரு பக்கமும் வேகவிட்டு எடுக்க வேண்டும். இதில் தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கலாம்.
- அதன் இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வேகவைத்து சுவையான ராகி பணியாரம் தயாரானது. இதை தக்காளி அல்லது தேங்காய் சட்னி வைத்து பரிமாறலாம்.

ராகி இனிப்பு பணியாரம் செய்முறை
இனிப்பு பணியாரம் செய்வதற்கு தாளிப்பு செய்வதற்குப் பதில், நெய்யில் முந்திரி, பாதாம், திராட்சை, தேங்காய் துருவலை வதக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது கருப்பட்டியை பாகு காய்ச்சி சேர்க்க வேண்டும். இதில் நாட்டுச் சர்க்கரையையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் சேர்த்து மாவை தயார் செய்து, அதே போல, ஒவ்வொன்றாக பணியாரச் சட்டியில் சுடுவதன் மூலம் இனிப்பு பணியாரமும் தயார் செய்யலாம்.
இவ்வாறு பிடித்த சுவையில் செய்து ராகி பணியாரம் செய்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க
Image Source: Freepik