Green Gram Paniyaram In Tamil: மழைக்காலத்தில் சூடான தேநீருடன் மொறு மொறுப்பான ஸ்னாக்ஸை விட சிறந்த விஷயம் எதுவும் இருக்க முடியாது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு நாம் எப்போதும் புதிய புதிய ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கவே விரும்புவோம். ஆனால், செய்த உணவையே மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கும், சாப்பிடுபவர்களுக்கும் சலித்து போய்விடும்.
அந்தவகையில், ஆரோக்கியத்திற்கு நல்லது என கருதப்படும் அவலை வைத்து ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். நம்மில் பெரும்பாலானோர் சமைக்க நேரம் இல்லாத நேரத்தில் பச்சைப்பயறு அவித்து சாப்பிடுவோம். ஆனால், இந்த முறை அவித்து இல்லை பச்சைப்பயறை பணியாரம் செய்யலாம். வாருங்கள் சூப்பரான மொறு மொறு பச்சைப்பயறு வடை எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Thuvaiyal Omelette: வெறும் 2 முட்டை இருந்தா போதும் சுவையான துவையல் ஆம்லேட் செய்யலாம்!
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
கடுகு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது
கறிவேப்பில்லை நறுக்கியது
எண்ணெய் - சிறிது
பச்சைப்பயறு பணியாரம் செய்முறை:
- பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறிய பயறை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்
- உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- இதையும் விழுதாக அரைத்து, பயறு மாவுடன் சேர்க்கவும்.
- இதில் உப்பு போட்டு, கலந்து, 3 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
- கடாயில், எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும், இதை மாவில் போட்டு கலக்கவும்.
- பணியார சட்டியை சூடு செய்து, எண்ணெய் ஊற்றவும்.
- முக்கால் அளவு மாவு ஊற்றி, சுடவும்.
- இருபுறமும் பொன்னிறமானதும், எடுத்தால் சுவையான பச்சைப்பயறு பணியாரம் தயார்!
பச்சை மூங் பருப்பின் நன்மைகள்:
- பச்சைப் பருப்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன.
- இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
- பச்சைப் பருப்பில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- பச்சைப் பருப்பில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- பச்சைப் பருப்பில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
- பச்சைப் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
- பச்சைப் பருப்பில் உள்ள புரதம் தசைகளை வலுப்படுத்தி எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
Pic Courtesy: Freepik