Pasi Payaru Kanji: வெறும் மூன்றே பொருளில் பித்தத்தைக் குறைக்கும் சூப்பர் ரெசிபி இதோ!

  • SHARE
  • FOLLOW
Pasi Payaru Kanji: வெறும் மூன்றே பொருளில் பித்தத்தைக் குறைக்கும் சூப்பர் ரெசிபி இதோ!


அவ்வாறே உடலில் பித்தத்தைக் குறைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வீட்டிலேயே எளிதான முறையில் ரெசிபி ஒன்றைத் தயார் செய்யலாம். பாசிப்பயறு கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரெசிபியானது உடலில் பித்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் தினமும் பாசிப்பயறு உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பாசிப்பயறு கஞ்சி தயாரிக்கும் முறை

தேவையானவை

  • பாசிப்பயறு - அரை கப்
  • அரிசி - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு

இந்த பதிவும் உதவலாம்: Vendhayam Benefits: அடேங்கப்பா… முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

செய்முறை

  • முதலில் குக்கர் ஒன்றில் அரிசி மற்றும் பாசிப்பயறு இரண்டையும் கலந்து அதற்கு ஏற்றாற்போல தாராளமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதை 6 விசில் வரும் வரை விட்டு இறக்க வேண்டும்.
  • இவ்வாறு இறக்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளலாம்.
  • இதில் விரும்பினால், சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதை கெட்டியாகவோ அல்லது கூடுதலாக சிறிது சூடான தண்ணீர் சேர்த்தோ அருந்தலாம்.
  • பாசிப்பயறு மற்றும் அரிசியை வேகவைப்பதற்கு குக்கரை பயன்படுத்தாமல் நேரடியாக பாத்திரத்தையும் பயன்படுத்தி வேக வைக்கலாம்.

பாசிப்பயற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்

பொதுவாக பாசிப்பயறு மஞ்சள், கறுப்பு மற்றும் பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகிறது. பாசிப்பயறு புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு வகையாகும். மேலும் இதில் ஐசோலிசியூன், வாலைன், அர்ஜினைன், ஃபினைலாலானைன் போன்ற பல்வேறு அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த அமினோ அமிலங்களை உடல் தானாக சுரக்காது என்பதால், பாசிப்பயறு போன்ற உணவுகளின் மூலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாசிப்பயற்றில் வைட்டமின் பி1 (தயாமின்) மற்றும் வைட்டமின் பி9 (ஃபோலேட்டுகள்) போன்றவை அதிகம் காணப்படுகிறது. இது தவிர, வைட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்), வைட்டமின் பி5 (நியாசின்), பி6 (பைரிக்டாஸின்), வைட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளது. எனவே இந்த பயிரை உணவில் ஏழு நாள்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Pulses: உடல் எடை குறைய இந்த பருப்பு வகைகளை சாப்பிடுங்கள்

மேலும் பாசிப்பயற்றில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.

பாசிப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாசிப்பயறு கஞ்சியை சாப்பிடுவது பித்தம் குறைவது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைத் தவிர, மற்ற சில நன்மைகளையும் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

  • உடல் எடையைக் குறைக்க பாசிப்பயறு பெரிதும் உதவுகிறது. ஏனெனில், இதன் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து பசியைக் கட்டுப்படுத்துகிறது. பாசிப்பயறு உண்பது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதுடன், உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
  • இதன் பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்றவை இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. எனவே அன்றாட உணவில் பாசிப்பயறு சேர்ப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
  • இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
  • பாசிப்பயற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
  • உடலில் அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் பாசிப்பயறு உதவுகிறது.

இவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாசிப்பயற்றினை சாலட், சூப், குழம்பு, கஞ்சி போன்ற பல்வேறு வழிகளில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கூடுதல் நன்மைகளைப் பெற இதை முளைக்கட்டி பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ulundhu Kanji: உளுந்தங்கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க! பல நன்மைகள் கிடைக்கும்..

Image Source: Freepik

Read Next

Avoid Foods with Lemon: நீங்க மறந்தும் எலுமிச்சையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க

Disclaimer

குறிச்சொற்கள்