Weight Loss Pulses: உடல் எடையை குறைப்பது, பராமரிப்பது என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதான விஷயமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க பலர் விரும்பினாலும் அதற்கென நேரம் ஒதுக்குவதில்லை. உண்ணும் உணவையே மருந்தாக மாற்றி உடல் எடையை குறைக்கலாம். உடல் கட்டமைப்பை பராமரிப்பதற்கு உடற்பயிற்சிகள் உதவினாலும் உணவுகள் பிரதான அங்கம் வகிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் குறித்து பல தகவலை நாம் அறிந்திருப்போம். இதில் பருப்பு வகைகளும் இருக்கிறது என பலருக்கும் தெரியாது.
எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள்
முறையான தூக்கம், பணி அழுத்தம் என வாழ்க்கை முறையே மாறி இருக்கிறது. எது எங்கே கிடைத்தாலும் அதை வாயில் போட்டுக் கொள்கிறோம். உடல் எடை அதிகரிக்க இதுவும் பிரதான காரணமாகும். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனை என பல சிக்கலை நாம் சந்திக்கிறோம். வீட்டில் இருக்கும் உணவுகளை வைத்தே நாம் உடல் எடையை குறைக்கலாம். தினமும் உண்ணும் பருப்பு வகைகள் நமது கொலஸ்ட்ராலை குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
பருப்பு வகைகள்
பருப்புகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைய உள்ளது. து செரிமான அமைப்பில் உள்ள கொழுப்புடன் சேர்ந்து உடலில் இருந்து நீங்குகிறது. எந்தெந்த பருப்புகள் உடல் எடை குறைய உதவும் என்பது குறித்தும் அதன் பலன்களையும் பார்க்கலாம்.
உளுந்தம் பருப்பு
தென்னிந்தியாவில் உளுந்தம்பருப்பு இல்லை என்றால் டிபன் என்பதே இல்லை. இட்லி, தோசை, வடை, அப்பம் என பல வகையான உணவு வகைகளுக்கு உளுந்தம்பருப்பு பிரதானம். இதில் புரதம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளன. உளுந்து சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். இத்தனை நாட்கள் சாதாரண இட்லி, தோசை என எண்ணும் உணவுகளில் இவ்வளவு பலன்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
துவரம் பருப்பு
துவரம் பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. புரதம் நல்ல ஆரோக்கியத்திற்கான முதல் படியாக இருந்தாலும், நார்ச்சத்து உடலில் இருந்து கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. இந்த பருப்பில் பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது ஆகச்சிறந்த உணவாகும். வாரத்திற்கு பல நாம் சாப்பிடும் சாம்பார் ஆனது துவரம் பருப்பு இல்லாமல் இல்லை. நாம் பச்சை காய்கறிகள் செய்யும் போதும் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். உடல் எடை குறைப்புக்கு இந்த பருப்பு பிரதானமானதாக இருக்கிறது. அதேபோல் இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய் வரும் அபாயம் இதன்மூலம் குறையும்.
வெந்தயம்
வெந்தயம் பல நோய்களுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. இதை வைத்து கறி வகைகள், இனிப்பு என பல வகை உணவுகளை செய்யலாம். மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், துத்தநாகம், ஃபோலேட் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. எளிதில் ஜீரணமாக வெந்தயம் பேருதவியாக இருக்கிறது. சாப்பிடவும் சுவையாக இருக்கும். வெந்தயத்தை சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது.
சிவப்பு பருப்பு
மிக சுவையான பருப்பு வகைகளில் சிவப்பு பருப்பு பிரதானமான ஒன்று. சிவப்பு பருப்பில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த பருப்பு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. புரோட்டீன்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், சிவப்பு பயறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
இந்த பதிவில் உடல் எடையை குறைக்க உதவும் பருப்பு வகைகளை அறிந்து கொண்டாலும், ஏதேனும் பக்க விளைவுகள் அல்லது தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik