Green coffee for Weight loss: கிரீன் டீ இல்ல கிரீன் காபி குடிங்க! எடை மடமடனு குறையும்

  • SHARE
  • FOLLOW
Green coffee for Weight loss: கிரீன் டீ இல்ல கிரீன் காபி குடிங்க! எடை மடமடனு குறையும்

உடல் எடை குறைய காபி (Green coffee for weight loss)

இன்று உடல் எடையை குறைப்பது பலருக்கும் கடினமான ஒன்றாக அமைகிறது. உடல் எடையைக் குறைக்க உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் நம்பகமான முறைகளாக இருப்பினும், சில பானங்கள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் உதவுகிறது. அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் பச்சை காபி உதவுகிறது. இதில் பச்சை காபி என்பது வறுக்கப்படாத காபி பீன்களில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது வழக்கமான காபி போலல்லாமல் குளோரோஜெனிக் அமிலங்களின் அதிக செறிவைக் கொண்டுள்ளது. இது உடல் எடையிழப்பு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea vs Black Tea: உடல் எடையை குறைக்க எது நல்லது - பிளாக் டீ அல்லது கிரீன் டீ?

பச்சை காபி என்றால் என்ன?

பச்சை காபி என்பது வறுக்கப்படாத காபி பீன்ஸ் ஆகும். இந்த காபி பீன்ஸானது வறுக்கும் செயல்பாடின் போது, அதன் நன்மை பயக்கும் கலவைகள் அதிலும் குறிப்பாக குளோரோஜெனிக் அமிலம் உடைக்கப்படுகிறது. இது அதிகளவிலான குளோரோஜெனிக் அமிலத்தை வைத்திருக்கிறது. இது உடல் எடையிழப்பை ஊக்குவிக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த பச்சை காபியை பானம் அல்லது சப்ளிமெண்ட் வடிவில் எடுத்துக் கொள்வது உடல் கொழுப்பை மிகவும் திறமையாக எரிக்க உதவுகிறது.

கிரீன் காபி எவ்வாறு உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது? (How does green coffee help in weight loss)

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க

பச்சை காபியில் நிறைந்துள்ள குளோரோஜெனிக் அமிலம் உடலின் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகிறது. விரைவான வளர்ச்சிதை மாற்றம் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இந்த முறையானது தீவிரமான உடல் செயல்பாடு இல்லாமல் கூட உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் பச்சை காபி சாறு உட்கொள்ளல் உடலில் கொழுப்பை எரிக்கும் நொதிகளை அதிகரிக்கவும், விரைவான உடல் எடையிழப்புக்கு பங்களிக்கிறது.

கொழுப்பு உறிஞ்சுதலைக் குறைப்பது

பச்சை காபியின் குளோரோஜெனிக் அமிலம் செரிமானப் பாதையில் கொழுப்பு உறிஞ்சுதலைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உடல் குறைந்த கொழுப்பை உறிஞ்சுவதால், அதன் சேமிப்பும் குறைவாகவும் இருக்கும். இவ்வாறு உடல் எடையிழப்புக்கு பங்களிக்கிறது. ஆய்வு ஒன்றில் சை காபி சாற்றை உட்கொண்டவர்கள், 12 வாரங்களுக்குப் பிறகு உடல் கொழுப்பு சதவிகிதம் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: எடை குறைப்புக்கு கிரீன் டீ எப்போது குடிக்க வேண்டும்? உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின்?

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துதல்

பச்சை காபியின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக அமைவது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகும். இத்தகைய நிலையான இரத்த சர்க்கரை அளவுகள் இன்சுலின் அதிகரிப்பைத் தடுக்கிறது. ஆய்வில் குளோரோஜெனிக் அமிலம் செரிமான மண்டலத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. இதன் மூலம் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கவும், இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

எடையிழப்பு தவிர, கிரீன் காபி உட்கொள்ளல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. க்ரீன் காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்கவும் உதவுகிறது.

இது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வறுத்த காபியை விட இதில் சிறிய அளவில் காஃபின் நிறைந்திருக்கும். எனவே அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் செரிமான பிரச்சினைகள், இதயத்துடிப்பு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். காஃபின் உணர்திறன் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் கிரீன் காபியை உட்கொள்ளும் முன்னதாக சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Black Coffee for Weight Loss: தினமும் ஒரு டம்ளர் பிளாக் காபி! தொப்பைக் கொழுப்பு முழுவதும் காலி!

Image Source: Freepik

Read Next

ஓ… உடம்புல கொலஸ்ட்ரால் அதிகரிக்க இதுதான் காரணமா?

Disclaimer