உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. இருப்பினும், கெட்ட கொலஸ்ட்ரால் நல்லதல்ல. உண்மையில் இந்த கொலஸ்ட்ரால் ஏன் அதிகரிக்கிறது? என்பதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்…
நன்றாக சாப்பிடுவதால் மட்டுமே கொழுப்பு அதிகரித்துவிடாது, உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர பல காரணங்கள் உள்ளன. ஆனால் அளவுக்கு அதிகமாக உடலில் கொழுப்பு சேருவது பல்வேறு உடல நலப் பிரச்சனைகளைக் கொண்டு வரும். இந்த சிக்கலை முன்கூட்டியே குறைக்க, என்னென்ன காரணங்களால் கொழுப்பு அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்து தடுக்கலாம்.
லைப்ஃஸ்டைல்:

மோசமான வாழ்க்கை முறையால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. நிறைவுற்ற கொழுப்புகளை உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகைபிடித்தல் மற்றும் அதிகமாக குடிப்பது ஆகியவை கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்.
மருந்துகள்:
உடல் நலக் கோளாறுகளுக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகளாலும் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. எல்லா மருந்துகளும் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது, ஆனால் சில மருந்துகள் இந்த கொழுப்பை அதிகரிக்கலாம்.
உடல் நலப் பிரச்சனைகள்:
டைப் 2 நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரித்து மற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மன அழுத்தம்:
மன அழுத்தத்தால் உடலில் கொலஸ்ட்ரால் கூட அதிகரிக்கிறது. மன அழுத்தம் நேரடியாக கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது. ஆனால், இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பிற பழக்கங்களுக்கு வழிவகுக்கிறது. இது கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
வயது:
தற்போதைய குழந்தைகளும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம். நாம் வயதாகும்போது, கல்லீரல் குறைவான கெட்ட கொழுப்பை நீக்குகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.