Causes of high cholesterol in human body: இரத்தத்தில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளே கொழுப்பு ஆகும். உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதற்கு கொழுப்பு தேவைப்படுகிறது. அதே சமயம், உடலில் சரியான அளவு கொழுப்பு இருப்பது மிகவும் முக்கியமாகும். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால், இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கொழுப்பு அதிகரிப்பதால், தமனிகளில் போதுமான இரத்த ஓட்டம் இருக்காது என்பது கூறப்படுகிறது. இது கட்டிகளை ஏற்படுத்தி பக்கவாதம் அல்லது மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகலாம்.
எனினும், சரியான வாழ்க்கை முறையைப் பயன்படுத்துவதன் மூலம் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஏனெனில், கொழுப்பு அதிகரிக்கும் போது, பல வகையான உடல் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. அதே சமயம், கொழுப்பு அதிகரிக்கும் போது, உடலில் வலி உண்டாகலாம். கொழுப்பு அதிகரிக்கும் போது உடலின் எந்த பாகங்கள் வலியை உணர்கிறது என்பது குறித்து இந்திய குடும்ப மருத்துவர்களின் டாக்டர் ராமன் குமார் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலின் காரணமாக உடலின் எந்த பகுதிகளில் வலி ஏற்படும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க உங்க சமையலில் இந்த எண்ணெய்களை சேர்த்துக்கோங்க
அதிகரிக்கும் கொலஸ்ட்ராலின் காரணமாக உடலில் எந்த பகுதியில் வலி ஏற்படுகிறது?
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக உடலில் பல்வேறு பகுதிகளில் வலி ஏற்படலாம். அவற்றைப் பற்றிக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
கால்களில் வலி
கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, கால்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கால்களின் தமனிகளுக்கு இரத்தம் சரியாகப் பாயவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு இரத்தம் சரியாகப் பாயாத போது இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படக்கூடும். அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, நடப்பதில் சிரமத்தையும் அதிகரிக்கலாம்.
கீழ் முதுகு வலி
அதிகளவிலான கொழுப்பு காரணமாக, கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தக்கூடும். இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, கீழ் முதுகு வலி ஏற்படுகிறது. இவ்வாறு கீழ் முதுகில் வலி ஏற்பட்டால், இந்த அறிகுறியை புறக்கணிக்கக் கூடாது. மேலும், கீழ் முதுகு வலி பிரச்சினையின் தீவிரத்தை பிரதிபலிக்கக்கூடும்.
மார்பு வலி
உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலின் காரணமாக, மார்பில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இவை இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லக்கூடிய நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேரும் போது, இந்த சூழ்நிலையில், மார்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக கொலஸ்ட்ராலின் காரணமாக சாதாரண அல்லது கடுமையான மார்பு வலியை ஏற்படுத்தலாம். இது போன்ற நிலையில், மார்பு வலி இருப்பின், இந்த அறிகுறியை புறக்கணிக்கக் கூடாது. எனவே மார்பு வலி அதிக கொழுப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க உடம்புல இருந்து கெட்ட கொழுப்பை வெளியேற்றணுமா? இந்த ஒரு பொருளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
கைகளில் வலி
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் சேரும் போது, கைகளிலும் வலி உண்டாக வாய்ப்புள்ளது. இரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேருவதால், அது அது கால்கள் மற்றும் கைகளின் இரத்த நாளங்களைப் பாதிக்கக்கூடும். இது கைகளில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். இந்நிலையில், கூச்ச உணர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கைகளில் வலி இருப்பின், இந்நிலையைப் புறக்கணிக்கக் கூடாது.
தாடைகளில் வலி
அதிக கொழுப்பின் காரணமாக தாடைகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் அடிக்கடி தாடை வலி இருந்தால், இந்த அறிகுறியை புறக்கணிக்கக் கூடாது. உண்மையில், தமனியில் கொழுப்பு சேர்வதால், அது தாடையின் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கலாம். இந்நிலையில், ஒரு ஈ.சி.ஜி. செய்வது அவசியமாகும். தாடைகளில் வலி ஏற்படுவது இதய நோயையும் குறிக்கலாம்.
உடலில் அதிக கொழுப்பைக் குறைப்பதற்கான வழிகள்
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். எனவே கொழுப்பைக் கட்டுப்படுத்த பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த தானியங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், லேசான உடற்பயிற்சி மற்றும் பிராணயாமாவை பயிற்சி செய்யலாம். மேலும் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்க புகைபிடிப்பதை விட்டுவிடுவது, மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்றவற்றைக் கையாள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்தப் பொடியை காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், கொலஸ்ட்ரால் மொத்தமும் கரைஞ்சி மறைஞ்சிடும்...!
Image Source: Freepik