How do uric acid levels affect your health: பொதுவாக யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் எனப்படும் பொருட்களை உடைக்கும்போது உடலில் உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும். இது கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, ஆல்கஹால் போன்ற சில உணவுகளிலும், உடல் செல்களிலும் காணப்படுகிறது. இந்த யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து, சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு, சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. எனினும், உடல் அதிகளவு யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும்போது அல்லது சிறுநீரகங்கள் அதை போதுமான அளவு வெளியேற்றத் தவறினால், இது இரத்தத்தில் சேருகிறது. இவ்வாறு இரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் சேர்வது ஹைப்பர்யூரிசிமியா எனப்படும் ஒரு நிலையாகும்.
அதிக யூரிக் அமிலம் உடல் ஆரோக்கியத்தைக் கணிசமாக பாதிக்கலாம். இது பொதுவாக, கீல்வாதத்துடன் தொடர்புடையது என்றாலும், ஒரு வகையான மூட்டுவலியை ஏற்படுத்தலாம். இது சிறுநீரக கற்கள், இதய பிரச்சனைகள் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பிற சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம். நாள்பட்ட அதிக யூரிக் அமிலத்தின் காரணமாக திசுக்கள் மற்றும் உறுப்புகளை சேதப்படுத்தலாம். இது நீண்டகால உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கலாம். இதில் அதிக யூரிக் அமிலத்தால் உடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதற்கான காரணங்களைக் காணலாம்.
உடலில் அதிக யூரிக் அமிலத்தால் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வழிகள்
சிறுநீரக கற்கள்
அதிகப்படியான யூரிக் அமிலம் ஆனது சிறுநீரகங்களில் படிகமாகி, சிறுநீரகக் கற்களை உருவாக்கும் அபாயம் உண்டாகலாம். இந்தக் கற்கள் குமட்டல், கீழ் முதுகு அல்லது வயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இவை சிறுநீரக தொற்று அல்லது சேதத்திற்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அதிக யூரிக் அமில பிரச்சனையா? இந்த பருப்பு வகைகளைக் கட்டாயம் தவிர்க்கணும்
முக்கிய கட்டுரைகள்
கீல்வாதம்
அதிக யூரிக் அமில அளவுகள் ஆனது மூட்டுகளில் யூரேட் படிகங்கள் உருவாக காரணமாகிறது. இவை கீல்வாதத்திற்கு வழிவகுக்கலாம். இந்த நிலையானது திடீர் மற்றும் கடுமையான வலி, வீக்கம் மற்றும் சிவத்தல் போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது பொதுவாக பெருவிரலைப் பாதிக்கலாம். மீண்டும் மீண்டும் கீல்வாத தாக்குதல்கள் மூட்டுகள் மற்றும் சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்துகிறது.
இதய நோய்கள்
ஹைப்பர்யூரிசிமியா காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஏனெனில் யூரிக் அமிலத்தின் குவிப்பு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இவை தமனிகளை சேதப்படுத்துவதுடன், பிளேக் குவிப்பை அதிகரிக்கிறது.
வகை 2 நீரிழிவு நோய்
அதிகளவு யூரிக் அமில அளவுகளின் காரணமாக இன்சுலின் உணர்திறன் சீர்குலைக்கப்பட்டு, இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இவை இறுதியில் டைப் 2 நீரிழிவு நோயையும் அதிகரிக்கலாம். ஏனெனில், யூரிக் அமிலம் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஊக்குவிக்கிறது. இவை இரண்டும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு பங்களிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம்
உயர்ந்த யூரிக் அமில அளவானது உயர் இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை இரத்த நாளங்களை சேதப்படுத்துவதுடன், இரத்த நாளங்கள் ஓய்வெடுக்க உதவும் நைட்ரிக் ஆக்சைடைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்கலாமா.? நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்..
நாள்பட்ட சிறுநீரக நோய்
தொடர்ச்சியான ஹைப்பர்யூரிசிமியா காரணமாக சிறுநீரக திசுக்களில் வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இவை சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். காலப்போக்கில் இது நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகங்களின் கழிவுகளை வடிகட்டும் திறனைக் குறைக்கிறது.
சோர்வு மற்றும் பலவீனம்
தொடர்ந்து யூரிக் அமில அளவுகள் அதிகரிப்பதால், உடலில் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்தி பொதுவான சோர்வு, தசை பலவீனம் மற்றும் ஆற்றல் மட்டங்களைக் குறைக்க வழிவகுக்குகிறது. இது வீக்கத்திற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் தொடர்ச்சியான எதிர்வினை காரணமாக ஏற்படுகிறது.
சரும பிரச்சினைகள்
அதிகரிக்கும் யூரிக் அமில அளவின் காரணமாக சில நேரங்களில் தோலில் குவிந்து, டோஃபி எனப்படும் சிறிய, வலிமிகுந்த கட்டிகளை உருவாக்குகிறது. குறிப்பாக நாள்பட்ட கீல்வாத நிகழ்வுகளில் இது ஏற்படலாம். இந்த டோஃபி வெடித்து, சுண்ணாம்பு போன்ற பொருளை வெளியிட்டு அசௌகரியம் அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.
எனினும் வழக்கமான உடற்பயிற்சி, நீரேற்றம் மற்றும் சீரான உணவு போன்றவற்றுடன் மருந்துகள் மூலம் யூரிக் அமில அளவை நிர்வகிப்பதன் மூலம் இந்த உடல்நல சிக்கல்களை பெரும்பாலும் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: அதிக யூரிக் அமில பிரச்சனை இருந்தால் இந்த காய்கறிகளை உட்கொள்ளக்கூடாது..
Image Source: Freepik