World inflammatory bowel disease day 2025 how to take care of your gut health: ஆண்டுதோறும் மே மாதம் 19 ஆம் நாள், உலக குடல் அழற்சி நோய் தினமாக (World IBD Day) அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் நாள்பட்ட, பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத நோய்களின் குழுவாக இந்த குடல் அழற்சி நோய் அமைகிறது. எனவே இந்த நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும், குடல் அழற்சி நோயைத் தடுப்பதற்குப் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
பொதுவாக குடல் ஆரோக்கியம் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவக்கூடியதாகும். குடல் அழற்சி நோய் ஆனது பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் ஏற்படக்கூடிய அழற்சி நிலைகளின் ஒரு குழு ஆகும். இந்த அழற்சி நோய் கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்ற பல்வேறு நிலைகளை உள்ளடக்கியதாகும். குடல் அழற்சி நோய் நாள்பட்ட நிலையைக் குறிக்கக் கூடியது. இதை நிர்வகிப்பதற்கென பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. இதில் உலக குடல் அழற்சி நோய் ஏன் கொண்டாடப்பட வேண்டும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சில குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முன்கூட்டிய வயதாவதைத் தடுக்க முடியுமா?
உலக குடல் அழற்சி நோய் தினம் ஏன் முக்கியமானது?
உலக குடல் அழற்சி நோய் தினம் கிரோன் நோய் அல்லது அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி உள்ளவர்களின் அன்றாட மீள்தன்மை பற்றியும், களங்கத்தை எதிர்த்துப் போராடுவது, நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாப்பது உள்ளிட்டவற்றைக் கொண்டதாகும்.
அழற்சி குடல் நோய் (IBD) இரண்டு முக்கிய நிலைமைகளைக் கொண்டுள்ளது. அவை,
முக்கிய கட்டுரைகள்
- கிரோன் நோய் - இது செரிமானப் பாதையை பாதிக்கலாம்.
- பெருங்குடல் அழற்சி - இது பெருங்குடல் மற்றும் மலக்குடலை பாதிக்கிறது.
இவை வெறும் வயிற்றுப் பிரச்சினைகளாக மட்டுமல்லாமல், நாள்பட்ட வீக்கம், கடுமையான செரிமான அறிகுறிகள், சோர்வு மற்றும் சில சமயங்களில் மூட்டு வலி அல்லது கண் எரிச்சல் போன்ற குடலுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களையும் உள்ளடக்கியதாகும். இந்த நிலைமைகளை புரிந்துகொள்வதற்காகவே உலக ஐபிடி தினம் அனுசரிக்கப்படுகிறது.
கிரோன் நோய் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய கிரோன் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி சங்கங்களின் கூட்டமைப்பு (EFCCA) தலைமையில், நோயாளி அமைப்புகளும் சுகாதார கூட்டணிகளும் உலக ஐபிடி தினத்தை நிறுவியது.
உலக IBD தினத்தின் தாக்கம் ஒரு தேதிக்கு அப்பால் குடல் ஆரோக்கியம் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்க ஊக்குவிப்பதாக அமைகிறது. IBD உள்ள பலர் வெளிப்புறமாக "சாதாரணமாக" தோன்றினாலும் கடுமையான அறிகுறிகளை நிர்வகிக்கின்றனர்.
இந்த தினம் கண்ணுக்குத் தெரியாத போர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் இரக்கம், உள்ளடக்கம் மற்றும் நோயாளி அதிகாரமளித்தலை வளர்க்கிறது.
IBD-க்கான தடுப்பு மற்றும் மேலாண்மை குறிப்புகள்
குடல் அழற்சி நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை. எனினும், சரியான மேலாண்மை வெடிப்புகளைக் குறைத்து நோயாளிகள் முழுமையான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது. இதில் குடல் ஆரோக்கியத்திற்கான சில குறிப்புகளைக் காணலாம்.
உணவைத் தனிப்பயனாக்குதல்
நாம் எடுத்துக் கொள்ளும் உணவு அறிகுறிகளைத் தூண்டலாம் அல்லது தணிக்கலாம். எனவே சீரான உணவுமுறையைக் கையாள வேண்டும். அதன் படி வறுத்த உணவுகள், பால் பொருட்கள் மற்றும் காரமான உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வெடிப்புகளின் போது, சிறிய, அடிக்கடி உணவை உண்ண வேண்டும்.
வெள்ளை அரிசி, வேகவைத்த காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற குடலுக்கு உகந்த விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே இந்த குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் தனிப்பயனாக்கப்பட்ட உணவுத் திட்டங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணரின் உதவியை நாட ஊக்குவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Inflammatory Bowel Diseases: மன அழுத்தத்தால் ஏற்படும் குடல் அழற்சி நோய்களை எவ்வாறு சமாளிப்பது?
நீரேற்றமாக இருப்பது
குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உடலை நீரேற்றமாக வைப்பது அவசியம். ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய நீரிழப்பு காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மன அழுத்த நிவாரணத்திற்கு முன்னுரிமை கொடுப்பது
மன அழுத்தம் IBD-ஐ ஏற்படுத்தாது என்றாலும், இவை அறிகுறிகளை மோசமாக்கலாம். உடல் பாதுகாப்புடன், மன ஆரோக்கியமும் அதே அளவு முக்கியமானதாகும். இதற்கு சில நுட்பங்களைக் கையாளலாம்.
- மென்மையான யோகா அல்லது இயற்கை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
- தியானம், ஆழ்ந்த சுவாசம் அல்லது நாட்குறிப்பை எழுத முயற்சிக்கலாம்.
- வாழ்க்கை முறைக்கு ஏற்ற சுய பராமரிப்பு அட்டவணையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: IBD மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்குமா.? நிபுணர் விளக்கம் இங்கே..
Image Source: Freepik