Diwali 2024 recipe moong bean laddu: பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே இனிப்புகள், காரங்கள் என பல்வேறு ரெசிபிகளைச் செய்வது வழக்கம் தான். அதிலும் இனிப்பு ரெசிபிகளான லட்டு, ஜிலேபி, மைசூர் பாக்கு இவற்றிற்கு எல்லாம் தான் முன்னுரிமை கொடுப்பர். எனினும் அதிகளவு சர்க்கரை நிறைந்த இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டு வரும். எனினும், இந்த ரெசிபிகள் மீதான நாட்டத்தில் அதிகளவு உட்கொள்வோம்.
அதிலும் கடைகளில் இனிப்புகளை வாங்கி சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமற்றது. அந்த இனிப்புகளில் அதிகளவு சர்க்கரை இருப்பது மட்டுமல்லாமல் கலப்படம் செய்திருக்கும் அபாயமும் இருக்கலாம். மறுபுறம், நீரிழிவு நோயாளிகளும் பண்டிகை நாட்களில் பலகாரங்கள் சாப்பிட விரும்புவார்கள். இந்த தீபாவளிக்கு ஆரோக்கியமான முறையில் லட்டு தயார் செய்யலாம். இதில் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாசிப்பயறு லட்டு தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sesame Seeds Laddu: எள்ளு லட்டு இப்படி செஞ்சி பாருங்க… ரொம்ப நல்லது.!
பாசிப்பயறு ஊட்டச்சத்துக்கள்
பாசிப்பயற்றில் அதிகளவிலான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில் புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது. இது தவிர, நார்ச்சத்துக்கள், தாதுப்பொருள்கள் போன்றவை பாசிப்பற்றில் நிறைந்துள்ளன. இதில் ஃபினைலாலானைன், ஐசோலிசியூன், வாலைன், லைசைன், அர்ஜினைன் உள்ளிட்ட பல முக்கிய அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. இதை முளைக்கட்டி வைக்கும் போது, அதன் ஊட்டச்சத்துக்கள் மாறிவிடும்.
பாசிப்பயறு லட்டு தயாரிக்கும் முறை
தேவையானவை
- பாசிப்பயிறு – ஒரு கப்
- பாதாம் – கால் கப்
- முந்திரி – கால் கப்
- பிஸ்தா – கால் கப்
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- மில்க் கிரீம் – அரை கப்
- சர்க்கரை - அரை கப் (பொடித்தது)
- ஃபுட் கலர் கிரீன் – கால் ஸ்பூன் (தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்)
இந்த பதிவும் உதவலாம்: Dry Fruit Ladoo: குட்டீஸ் முதல் பெரியவர்களின் ஆரோக்கியதிற்கு இந்த லட்டு போதும்!!
பாசிப்பயறு லட்டு செய்வது எப்படி?
- முதலில் கடாய் ஒன்றில் சிறிது நெய் சேர்த்து, பாசிப்பயிறை சேர்க்க வேண்டும். இது நல்ல பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளலாம்.
- இவ்வாறு பொன்னிறமான பிறகு ஆற வைக்க வேண்டும். இது காய்ந்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
- அதன் பின், ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், பிஸ்தாவை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளலாம்.
- பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்த பாசிப்பயிறை சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அதில் மில்க் கிரீம், ஃபுட் கலர் போன்றவற்றை சேர்த்து வறுக்கலாம்.
- இதனை நல்ல பச்சை வாசம் போகும் வரை வறுத்து விட்டு, இறுதியாக வறுத்து வைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
- பின்னர், இதை அடுப்பிலிருந்து இறக்கி கை பொறுக்கும் அளவு சூடு வந்தவுடன், சர்க்கரைப் பொடியைச் சேர்த்து சிறு லட்டுகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
- இவ்வாறு ஆரோக்கியமான முறையில் பாசிப்பயறு லட்டு தயார் செய்யலாம்.

பாசிப்பயற்றின் ஆரோக்கிய நன்மைகள்
- பாசிப்பயறு உட்கொள்வது உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
- இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
- இவை செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
- பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க
Image Source: Freepik