Expert

சுகர் இல்லாத ட்ரை ஃபுரூட் ரெசிபி.. இப்படி செஞ்சி சாப்பிடுங்க! நிபுணர் சொன்னது

எல்லோரும் இனிப்பு சாப்பிட விரும்புகின்றனர். ஆனால், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் சர்க்கரை இனிப்புகளைத் தவிர்க்கின்றனர். சர்க்கரை மற்றும் வெல்லம் இல்லாமல் இனிப்பு லட்டு தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சுகர் இல்லாத ட்ரை ஃபுரூட் ரெசிபி.. இப்படி செஞ்சி சாப்பிடுங்க! நிபுணர் சொன்னது


How to make sugar free dry fruit laddu: யாருக்குத் தான் இனிப்பு என்றால் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்பு சாப்பிட விரும்புகின்றனர். இனிப்பு வகைகள் ஏராளம் உள்ளன. அதிலும் குறிப்பாக, லட்டு பற்றி பேசும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, மற்றும் அதிக நெய் போன்றவற்றிற்காக அதை விரும்பி உண்ணுகிறோம். இவை இரண்டுமே லட்டின் சுவையை அதிகரிக்கிறது. ஆனால், இதில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவதால் இதை சாப்பிடுவதற்கு பலரும் தயங்குகின்றனர். ஏனெனில், சில நேரங்களில் ஆரோக்கிய ரீதியாக தீங்கு விளைவிக்கலாம்.

எனவே தான், இப்போதெல்லாம் மக்கள் ஆரோக்கியமான மற்றும் சர்க்கரை இல்லாத இனிப்புகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது தங்கள் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோர்க்கு சர்க்கரை இல்லாத ரெசிபியை சாப்பிட விரும்புபவர். அவர்களுக்காகவே, சர்க்கரை இல்லாத சிறப்பு ரெசிபியாக உலர் பழ லட்டு அமைகிறது. இது குறைந்த அளவில் நன்மை பயக்கும். குழந்தைகள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் ஆற்றல் நிறைந்த சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது.

நிபுணரின் கருத்து

டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா அவர்கள் இந்த சர்க்கரை இல்லாத உலர் பழ லட்டு குறித்து பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “பேரீச்சம்பழம், பாதாம், திராட்சை, நெய் மற்றும் ரவை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை இல்லாத உலர் பழ லட்டு ஒரு சரியான ஆரோக்கியமான சிற்றுண்டி மற்றும் இனிப்பு விருப்பமாகும்”. என்று கூறியுள்ளார்.

நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா, இந்த லட்டின் ஊட்டச்சத்து மதிப்பு, அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் வீட்டிலேயே தயாரிப்பதற்கான எளிதான செய்முறை பற்றி பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல ஆரோக்கியத்திற்கு நீங்க கட்டாயம் ஊறவைத்து சாப்பிட வேண்டிய 8 உலர் பழங்கள் இதோ..

சர்க்கரை மற்றும் வெல்லம் இல்லாமல் உலர் பழ லட்டு

இந்த வகை லட்டுகளின் மிகப்பெரிய நன்மை என்னவெனில், அதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படாதது ஆகும். பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையில் நிறைந்திருக்கும் இயற்கையான இனிப்பு அவற்றை இனிப்பாக மாற்ற போதுமானது. மேலும், பாதாம் மற்றும் ரவை போன்றவை அவற்றை ஆரோக்கியமான சிற்றுண்டியாக மாற்றுகிறது. கூடுதலாக நெய் சேர்ப்பது அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டையும் அதிகரிக்கிறது. எனவே தான் இந்த லட்டு ஒரு சூப்பர்ஃபுட் ஆக கருதப்படுகிறது. இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை பயக்கும்.

ஊட்டச்சத்து மதிப்பு

தோராயமாக 100 கிராம் லட்டுவில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் அளவைக் குறித்து காணலாம்.

  • கலோரிகள்: 320-350
  • ஆரோக்கியமான கொழுப்புகள்: 10-12 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்: 40–45 கிராம்
  • நார்ச்சத்து: 6–7 கிராம்
  • புரதம்: 7-8 கிராம்
  • நல்ல அளவு இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்

உணவியல் நிபுணர் ரக்ஷிதா மெஹ்ராவின் கூற்றுப்படி, “இந்த லட்டுகளில் வைட்டமின் ஈ, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு அல்லது சோர்வாக உணரும் நபர்களுக்கு இது நன்மை பயக்கும். மேலும் இது ஆற்றல் ஊக்கிவேலையைச் செய்கிறது.” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Pistachio benefits: இது தெரிஞ்சா தினமும் பிஸ்தா சாப்பிடுவீங்க.. தினமும் 4 சாப்பிடுங்க.. அதிசயத்தை நீங்களே பாப்பீங்க..

சர்க்கரை இல்லாத லட்டுவின் நன்மைகள்

  • பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. இந்த லட்டு குறிப்பாக, குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஆற்றல் சிற்றுண்டியாக செயல்படுகிறது.
  • பாதாம் மற்றும் நெய்யில் கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை பலப்படுத்துகிறது. மேலும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
  • ரவை மற்றும் உலர்ந்த பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையைக் குறைக்கிறது.
  • உலர் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அடிக்கடி ஏற்படும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
  • பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையில் உள்ள இரும்புச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
  • நெய் மற்றும் உலர் பழங்கள் உடலில் வெப்பத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே தான் இந்த லட்டுகளைக் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும்.
  • சரியான அளவில் தினமும் 1-2 லட்டு எடுத்துக் கொண்டால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும். மேலும் அடிக்கடி பசி எடுக்காமல் பாதுகாக்கிறது.

சர்க்கரை இல்லாத லட்டு செய்வது எப்படி

தேவையானவை

  • பேரீச்சம்பழம் - 1 கப் (விதைகள் இல்லாதது)
  • பாதாம் - அரை கப்
  • திராட்சை - கால் கப்
  • ரவை - அரை கப்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை

  • முதலில், பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
  • பின், பாதாம் மற்றும் திராட்சையை லேசாக நசுக்கலாம்.
  • ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, ரவையை லேசான பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
  • இப்போது அதனுடன் பேரீச்சம்பழம், திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்தக் கலவை கெட்டியாக வர ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்து ஏலக்காய் பொடியைச் சேர்க்கலாம்.
  • இது கொஞ்சம் ஆறியதும், சிறிய லட்டுகளை தயார் செய்யலாம்.
  • இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான உலர் பழ லட்டு சூப்பர்ஃபுட் தயாராகி விட்டது.

முடிவுரை

பாதாம், நெய், திராட்சை, பேரீச்சம்பழம் மற்றும் ரவை போன்றவற்றால் செய்யப்பட்ட இந்த சர்க்கரை இல்லாத உலர் பழ லட்டு சுவை மற்றும் ஆரோக்கியம் மிகுந்த கலவையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி தேர்வாகும். இனிப்புகளை சாப்பிடுவதை விரும்பினாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்புபவர்கள், இந்த லட்டுகளை அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டும் என மருத்துவ உணவியல் நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு நோயாளிகள் எந்த ட்ரை ஃபுரூட்ஸ் சாப்பிடுவது ரொம்ப நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

ராகியுடன் நீங்க சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன தெரியுமா? நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

Disclaimer