Sat Sep 12, 2026 | 12:48 AM IST

Expert

ராகியுடன் நீங்க சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன தெரியுமா? நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

Superfoods to combine with ragi for extra nutrition: இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு ராகி போன்ற ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். எனினும், ராகியுடன் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது கூடுதல் நன்மையைத் தருகிறது. இதில் ராகியுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன என்பதைக் காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் உணவு முறை குறித்து முன்பை விட அதிக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். இதனால் பலரும் குப்பை உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படும் நோய்களைக் கருத்தில் கொண்டு, மக்கள் இயற்கை மற்றும் பாரம்பரிய தானியங்களுக்குத் திரும்புகின்றனர். அதில் ஒன்றாக ராகி அமைகிறது. இது சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகும். ராகியில் அதிகளவிலான கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. எனவே தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

குறிப்பாக, இரத்த சோகை, நீரிழிவு, எலும்பு பலவீனம் அல்லது உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ராகி உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர வைக்கிறது. எடை இழப்பு உணவில் ராகியும் சேர்க்கப்படுவதற்கான காரணமும் இது தான். ஆனால் ராகியை வேறு சில சூப்பர்ஃபுட்களுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம், அதன் நன்மைகளை பல மடங்கு அதிகரிக்கலாம்.

இதில் ஜெய்ப்பூரில் உள்ள ஏஞ்சல்கேர்-ஏ நியூட்ரிஷன் அண்ட் வெல்னஸ் சென்டரின் இயக்குநர் உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் அவர்கள் ராகியுடன் எந்த சூப்பர்ஃபுட்களை சாப்பிட வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: கோடைகாலத்தில் ராகி ரொட்டி சாப்பிடலாமா.? நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்..

ராகியுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய உணவுகள்

ராகி மற்றும் வெல்லம்

ராகியில் நல்ல அளவிலான இரும்புச்சத்துக்கள் உள்ளது. எனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகியை உட்கொள்வது நன்மை பயக்கும். அதே சமயம், வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளது. இதற்கு ராகி மற்றும் வெல்லம் கலந்து லட்டு அல்லது பூவா தயார் செய்து சாப்பிடலாம். இது இரத்த சோகையை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கலவை குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

ராகி மற்றும் நட்ஸ்

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால், ராகியுடன் பாதாம், வால்நட், முந்திரி போன்ற உலர் பழங்களைச் சேர்க்கலாம். ராகியில் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. அதே சமயம், உலர் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவது சுவையானதாக மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது.

ராகி மற்றும் பழங்கள்

ராகியுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமான சிற்றுண்டி தேர்வாகும். உதாரணமாக, ராகி அப்பத்தில் வாழைப்பழத்தைச் சேர்ப்பது அல்லது ஆப்பிள் மற்றும் பேரீச்சம்பழத்துடன் சேர்த்து ராகி ஸ்மூத்தி தயார் செய்வது நன்மை தரும். ராகியுடன் பழங்களை உட்கொள்வது உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. இது ஒரு ஆற்றல் ஊக்கியாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவாகவும் அமைகிறது.

ராகி மற்றும் தேன்

எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக ராகியில் தேன் கலந்து சாப்பிடலாம். ராகி மாவு நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தேன் அதில் இயற்கையான இனிப்பாக செயல்படுகிறது. எனவே தேனுடன் கூடிய ராகி கஞ்சி உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு ஒரு சரியான காலை உணவாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Chettinad Rangoon Puttu: அரிசி மாவு புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. செட்டிநாடு ரங்கூன் புட்டு சாப்பிட்டது உண்டா?

ராகி மற்றும் பால்

ராகி உட்கொள்வது கால்சியத்தின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக இணைப்பது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. பாலில் செய்த ராகி கஞ்சி அல்லது ராகி கீர் ரெசிபியை குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்குக் கொடுக்கலாம். எலும்பு பலவீனம், வயதாகும்போது ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு இழப்பைத் தடுக்க உதவுகிறது.

முடிவுரை

ராகி ஒரு சூப்பர்ஃபுட் உணவாகும். ஆனால், ராகியை பால், தயிர், வெல்லம், நட்ஸ், பழங்கள் மற்றும் தேன் போன்ற பிற சூப்பர்ஃபுட்களுடன் இணைக்கும்போது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகிறது. இது குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும். எனவே ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை விரும்புபவர்கள், உணவுத் திட்டத்தில் ராகியை இந்த சூப்பர்ஃபுட்களுடன் இணைத்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகள் போதும்..

Image Source: Freepik

Read Next

எடை குறைக்க ஜிம்முக்கு போவதற்கு முன்... இந்த 5 உணவுப் பழக்கங்களை மாற்றுங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content