Sugar Free Recipes: உணவு என்பது சமநிலையைப் பற்றியது. எனவே, பல்வேறு காரணங்களுக்காக சர்க்கரையைக் குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். ஆனால் புத்திசாலித்தனமாக திட்டமிட்டால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லாமலேயே நீங்கள் இனிப்பின் சுவையை ருசித்து மகிழலாம்.

நீரழிவு நோயளிகள் கூட தேங்காய் சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன், பேரீச்சம் பழம் போன்ற ஆரோக்கியமான சர்க்கரை மாற்றுகளைக் கொண்டு சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீம், சர்க்கரை இல்லாத கேக் மற்றும் சர்க்கரை இல்லாத பிற இனிப்பு வகைகளை சுவைத்து மகிழுங்கள்.
1.பாதாம் பர்பி:
வறுத்து, பொடியாக்கப்பட்ட பாதாம், துருவிய கோவா, ஸ்வீட்னர் ஆகிய மூன்றே பொருட்களை கொண்டு வெறும் அரை மணி நேரத்திற்குள் இதனை செய்துவிடலாம்.
இதையும் படிங்க: Diwali 2023: இந்த பண்டிகையில் சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன?
செய்முறை:
- முதலில் சூடாக்கப்பட்ட தவாவில் கோவா மற்றும் ஸ்வீட்னர் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- அதன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு வறுத்து, பொடியாக்கப்பட்ட பாதாமை அதனுடன் சேர்க்க வேண்டும்.
- தற்போது மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், ஓவனில் வைத்து பேக் செய்தால், சுவையான பாதாம் பர்பி தயாராகிவிடும்.
2. நட்ஸ் லட்டு:
- தவாவில் நெய் காய்ந்த பிறகு தலா ஒரு தேக்கரண்டி வீதம், நொறுக்கப்பட்ட பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ் மற்றும் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள் ஆகியவற்றை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
- இதில் சேர்க்க இனிப்பிற்கு பதிலாக நன்கு ஊறவைக்கப்பட்ட 11/2 கப் பேரீச்சம் பழங்களை பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது மற்றொரு தவாவில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் சிறிதளவு காய்ந்த திராட்சைகள் மற்றும் பேரீச்சம் பழம் பேஸ்ட்டை கலந்து நன்றாக கிளற வேண்டும்.
- இத்துடன் வறுக்கப்பட்ட நட்ஸ் வகைகள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள்.
- இதனை சிறிய, சிறிய உருண்டைகளாக உருட்டினால் சர்க்கரை இல்லாத ஆரோக்கியமான நட்ஸ் லட்டு ரெடி.
3. வாழைப்பழ அல்வா:
ஒரு சூடான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு, மிக்ஸியில் நன்கு அரைத்த வாழைப்பழ கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- சுமார் 15 நிமிடத்திற்கு பிறகு வாழைப்பழ கலவை நிறம் மாறி அல்வா போன்ற கெட்டியான பதத்திற்கு மாறும்.
- இப்போது காய்ச்சி வடிகட்டிய வெல்லத்தை வாழைப்பழத்தில் ஊற்றி, நன்றாக கிளறிவிட வேண்டும். இரண்டும் நன்றாக கலந்த பிறகு, அவ்வப்போது நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- சிறிது நேரத்திற்கு பிறகு வெல்லம் மற்றும் வாழைப்பழம் கலந்த கலவை பாத்திரத்தில் ஓட்டாமல் அல்வா பதத்திற்கு வருவதைக் காணலாம்.
- இத்துடன் சிறிதளவு ஏலக்காய் தூள், வறுக்கப்பட்ட நட்ஸ் வகைகளை சேர்த்து 3 மணி நேரத்திற்கு குளிர வைக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுக்குப் பிடித்தமான வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
4. சர்க்கரை இல்லாத கடலை மாவு லட்டு:
இந்தியர்களின் பேவரைட் இனிப்பான கடலை மாவு லட்டுவை இனிப்பு இல்லாமல் செய்ய, 2 கப் கடலை மாவு, 1/2 கப் நெய், 1 கப் தேங்காய் சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் ஆகியவை தேவை.
கடலை மாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்து, ஆறவைத்து, தேங்காய் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியுடன் கலக்கவும். இந்த கலவையை உருண்டையாக பிடித்து மண, மணக்கும் சுவையுடன் கூடிய லட்டை தயார் செய்யலாம்.
5. ஓட்ஸ் கீர்:
பாயாசம் மீதான உங்கள் காதலை தீர்க்க, இந்த ஹெல்தியான ஓட்ஸ் கீர் உதவும். இதை செய்ய, ஒரு கப் ஓட்ஸ், அரை லிட்டர் பால், 5 பேரீச்சம் பழம், 7 பாதாம், ஒரு வாழைப்பழம், சிறிதளவு ஏலக்காய் மற்றும் காய்ந்த திராட்சைகள் தேவை.
- முதலில் ஓட்ஸை 5 நிமிடங்கள் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் பால், பேரீச்சம் பழம், பாதாம், திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
- இத்துடன் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து கெட்டியான பதம் வரும் வரை நன்றாக கிளறவும். இந்த சுவையான ஓட்ஸ் கீரை நீங்கள் சூடாகவோ அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றோ பரிமாறலாம்.
Image Source: Freepik