Diwali Health issues: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். இனிப்பு, புத்தாடை, பட்டாசு, பரிசு பொருட்கள் என தீபாவளி வீட்டிற்குள் கொண்டாட்டத்தை கொண்டு வரும் அதேவேளையில், அதிகப்படியான தீபாவளி விருந்து, இனிப்பு, காற்று மாசு, புகை போன்ற காரணங்களால் சில உடல் நலப்பிரச்சனைகளும் வரக்கூடும்.
எனவே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய உடல் நலப்பிரச்சனைகள் என்னென்ன, அவற்றை தவிர்ப்பது எப்படி என்ற ஆலோசனையை உங்களுக்காக தொகுத்துள்ளோம்…
1.செரிமான பிரச்சனைகள்:
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று ஒன்றாக உணவருந்துவதும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதும் தீபாவளி பண்டிகை அன்று வழக்கமான ஒன்றாகும். அப்படி விருந்திற்காக செல்லும் போது வெல்கம் ட்ரிங்க்ஸ், ஸ்வீட்ஸ், விதவிதமான உணவு வகைகள் என தடபுடலான கவனிப்புகள் இருக்கும்.

இருப்பினும், அதிகப்படியான உணவு உட்கொள்வதால், இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்படலாம், இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பொதுவான அமிலத்தன்மையை ஏற்படுத்தும். நீங்கள் வெளியில் சாப்பிட விரும்பினால், அதிகப்படியான உணவு வாந்தி, வயிற்று உபசம் மற்றும்ஃபுட் பாய்ஷன் போன்ற பல சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்தும். அசிடிட்டி பிரச்சனை அதிகமானால் தலைவலி வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
எனவே தடபுடலான உணவு விருந்தில் கலந்து கொண்டாலும், அளவாக சாப்பிட்டு மகிழ்ச்சியை அளவில்லாமல் கொண்டாடுவது நல்லது.
2.மோசமான தூக்கம்:
தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பார்ட்டிகள் தொடங்கிவிடுகின்றன. டான்ஸ், பாட்டு, கேளிக்கை என இரவு முழுவதும் என்ஜாய் செய்துவிட்டு, விடியற்காலையிலேயே எழுந்து தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயார் ஆவோர் ஏராளம். இதனால் உங்கள் தூக்க சுழற்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஒழுங்கற்ற தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் மோசமான மனநிலையையும் ஏற்படுத்தும். சரியான தூக்கமின்மை இதயம் மற்றும் மூளையின் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
3.இதய நோய் பிரச்சனைகள்:
பண்டிகை காலம் வந்துவிட்டாலே போதும் வீட்டை சுத்தப்படுத்துவது, அலங்கரிப்பது, விருந்திற்கு உணவு மற்றும் இனிப்பு பலகாரங்களை தயார் செய்வது என வழக்கத்திற்கு அதிகமான வேலைகளை செய்கிறோம். இப்படி திடீரென உடலுக்கு அதிகப்படியாக வேலை கொடுப்பது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அத்துடன் தீபாவளியை முன்னிட்டு, அதிகப்படியாக எண்ணெயில் பொறித்த பலகாரங்கள், அதிக இனிப்புகளை உட்கொள்வதால், சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.
4.உயர் இரத்த அழுத்தம்:
ஆல்கஹாலையோ , குளிர் பானங்களை மிதமாக எடுத்துக்கொள்ள்வோ மற்றும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளாமலோ இருப்பது நல்லது. இது உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். உங்களுக்கு நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், கட்டாயம் மதுவை தவிர்க்க வேண்டும்
இதையும் படிங்க: Diwali 2023: இந்த பண்டிகையில் சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியது என்ன?
இந்த பண்டிகைக் காலத்தில் நண்பர்களுடனான சந்திப்பின் போது புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் பலரும் ஈடுபடுகிறார்கள். இதனை கட்டாயம் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
5.சுவாச பிரச்சனை:
இந்தியாவில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தீபாவளி சமயத்தில் அதிக அளவிலான பட்டாசுக்களை வெடிப்பதால் காற்று மிகவும் மாசடைகிறது.இதனால் ஆஸ்துமா போன்ற சுவாசப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டோர் கடுமையான அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். சில சமயங்களில் அவசர சிகிச்சை பெறும் அளவிற்கு கூட நிலை மோசமடைகிறது.
இந்த நேரத்தில் உரத்த இசை மற்றும் பட்டாசுகளால் ஒலி மாசுபாடு அதிகரிக்கிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனைகளில் இருந்து தப்ப உதவும் டிப்ஸ்:
- சாப்பிடும் போது குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பச்சை இலை காய்கறிகள், ப்ரெஷான பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள், குறைந்தபட்சம் 4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
- அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- சிறந்த மனநிலை மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்காக 6-8 மணி நேரம் தூங்குங்கள்.
- தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- மதுவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் பயனற்ற கலோரிகள் அடங்கிய சோடா பானங்களை தவிருக்கள்.
- அதிகமாக சாப்பிட்டு விட்டு, மறுநாள் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது போன்ற திடீர் வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்யாதீர்கள்.