Health Benefits Of Ulundhu Kanji: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக, நாம் பல உடல் சார்ந்த பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இத்தகைய சூழலில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்க உளுந்தங்கஞ்சி உதவும். இதன் நன்மைகள் என்ன? இதனை எப்படி செய்வது? என்பதை இங்கே காண்போம்.
உளுந்தங்கஞ்சியின் நன்மைகள் (Ulundhu Kanji Benefits)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இரு உணவாக உளுந்தங்கஞ்சி திகழ்கிறது. இடுப்பு வலி, முதுகு வலி, கை கால் வலி, மூட்டு வலி போன்றவற்றில் இருந்து விடுபட உளுந்தங்கஞ்சி உதவுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு வரம் என்றே சொல்லலாம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமத்தில் இருந்து தப்பிக்க, உளுந்தங்கஞ்சி பெரிதும் உதவுகிறது. மேலும் கருப்பையை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.
இது தவிர, உடல் எடை கூடவும், சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளை அகற்றவும், எலும்புகளை பலப்படுத்தவும் உளுந்தங்கஞ்சி சிறந்து திகழ்கிறது.
இதையும் படிங்க: Godhumai Rava Idli: ஒரு கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சுவையான இட்லி ரெடி..
உளுந்தங்கஞ்சி எப்படி செய்வது? (How To Make Ulundhu Kanji)
தேவையான பொருட்கள்:
- உளுந்து - 1 கப்
- தேங்காய் பால் - 1 கப்
- சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
- துருவிய தேங்காய் - ஒரு கைப்பிடி
- அரிசி மாவு - 2 டீஸ்பூன்
- வெல்லம் - 1 கப்
- ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- உளுந்தை நன்கு சுத்தம் செய்து, இதனுடன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊறவிடவும்.
- இது நன்கு ஊறிய பிறகு, இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்த உளுந்து மற்றும் வெந்தய கலவையை சேர்க்கவும்.
- இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதில் வெல்லம், ஏலக்காய், சுக்கு பொடி போன்றவற்றை கலக்கவும்.
- இதனுடன் அரிசி மாவு சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இவ்வாறு செய்தால் கஞ்சி ரெடி.
- தற்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு கைப்பிடி துருவிய தேங்காவை தாளித்து, கஞ்சியில் சேர்க்கவும். அவ்வளவு தான் உளுந்தங்கஞ்சி தயார்.
Image Source: Freepik