ஜவ்வரிசி உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆனால் சிலர் இதைச் சாப்பிடாமல் விலகி இருப்பதே நல்லது, இல்லையேல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கக்கக்கூடும்.
விரதம் இருக்கும் பலரும், பழங்களுடன் ஜவ்வரிசி கிச்சிடி,பாயசம், வடை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். இதுஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதனுடன் செய்யப்படும் அனைத்தும் சுவையாக இருக்கும். மேலும் இதில் புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன.

இவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சிலர் இதைச் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். இல்லையெனில், அவர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும்.
சர்க்கரை நோய்:
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, கார்போஹைட்ரேட்டுகள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன. இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) அதிகமாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் குறைந்த ஜிஐ உணவுகளையே சாப்பிட வேண்டும். ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டின் சதவீதம் மிக அதிகம். எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தவிர்க்க வேண்டியது அவசியம். இது சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
எடை அதிகமுள்ளவர்கள்:
விரதம் இருக்கும் போது ஜவ்வரிசியை மட்டும் சாப்பிட்டால் பல கிலோ எடை குறையும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். ஏனெனில் ஜவ்வரிசியில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இரண்டும் நிறைந்துள்ளது. இது உங்கள் உடல் எடையை குறைப்பதோடு, விரைவாக எடை அதிகரிக்கவும் செய்யும்.
தைராய்டு:
ஐவ்வரிசியை அதிகமாக உட்கொள்வது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இது படிப்படியாக தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஏற்கனவே தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதனை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மேலும் இதை அதிகப்படியாக உட்கொள்வது சுவாச பிரச்சனைகள், மார்பு வலி, தலைவலி மற்றும் தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சனைகள்:
அதிகப்படியான ஐவ்வரிசியை உட்கொள்வது வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீண்டகால நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைவாக உள்ளது. எனவே ஆற்றலுக்காக உண்ணாவிரத நாளில் சபுதானாவை மட்டும் நம்பிவிடாதீர்கள். சரியான ஊட்டச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பது நல்லது.
Image Source: Freepik