நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் இரண்டற கலந்திருந்த சிறுதானியங்கள் மற்றும் தானியங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது யாரிடமும் இல்லை. கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகளை உட்கொள்வது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன.
இவை நீரிழிவு, எடை அதிகரிப்பு, உடல் பருமன், வாயு, மலச்சிக்கல், கல்லீரல் மற்றும் இதய பிரச்சனைகளை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சிலருக்கு சிறுதானியங்களால் உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இதை யாரெல்லாம் சாப்பிடலாம்? அவர்கள் எதைச் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
இப்போதெல்லாம் சிலர் இதை டயட்டாக எடுத்துக்கொள்கிறார்கள். இதில் பீட்டா கெரட்டின் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற இது பயனுள்ளதாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. இதில் கலோரிகள் குறைவு. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.
நீரிழிவு நோயுடன் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கப் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பிற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தானியங்களில் இரும்பு, கால்சியம், துத்தநாகம், பைடிக் அமிலம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால் சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், சிலர் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
தோல் அலர்ஜி:
சிலருக்கு தானியங்களால் அலர்ஜியாக இருக்கலாம். தோல் அரிப்பு, ஆஸ்துமா, இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்றவை இந்த ஒவ்வாமையின் அறிகுறிகளாகும்.
செலியாக் நோய் உள்ளவர்கள்:
செலியாக் நோய் உள்ளவர்கள் கோதுமை மற்றும் பார்லி போன்ற பசையம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. சில சிறுதானியங்களிலும் பசையம் இருக்கலாம் என்பதால், கவனத்துடன் இருக்க வேண்டும்.
இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள்:
சிறுதானியங்கள் சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கலாம். இது வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
ஹைப்பர் தைராய்டிசம்:
ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் தானியங்களை உட்கொள்ளக்கூடாது. சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், குறைவாக சாப்பிடுவது நல்லது. இது தைராய்டு எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கிறது.
மருத்துவரின் ஆலோசனை:
ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், தானியங்களை சாப்பிடுவது பற்றி உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik