குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி பிஸ்கட்களை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது உண்டு. ஆனால் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்ன? என தெரிந்து கொள்வோம்.
செரிமான கோளாறு:
முக்கிய கட்டுரைகள்
பிஸ்கட் அதிகம் சாப்பிடுவது உடல் நலக்குறைவுகளுக்கு நிச்சயம் வழிவகுக்கும். ஏனெனில் பிஸ்கட் தயாரிப்பில் இயற்கையாகவே மாவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரும்பாலான பிஸ்கட்களில் பயன்படுத்தப்படும் மைதா மாவு, ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்லது.

அளவுக்கு அதிகமாக மைதா மாவு சாப்பிட்டால் நமது செரிமான மண்டலம் பாதிக்கப்படும். பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். மேலும் கோதுமை மாவை பதப்படுத்தி பிஸ்கட் தயாரிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீரழிவு நோய்:
பிஸ்கட் தயாரிக்க அதிக அளவிலான சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. எனவே பிஸ்கட் அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய், பல் பிரச்சனைகள், ஏற்படும். நாம் அதிக சர்க்கரை சாப்பிடுவதும் நல்லதல்ல. அதிக சர்க்கரை சாப்பிடுவது டைப் 2 நீரிழிவுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது:
பிஸ்கட் பொதுவாக மாவு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், அதிக சோடியம், சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இவற்றை உண்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், ஏனெனில் இவற்றின் ருசிக்கு பழகிய பலர் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்கின்றனர். இதன் விளைவாக, எடை கணிசமாக அதிகரிக்கிறது. அவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் உப்பு நமது ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.
2018 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பிஸ்கட்டில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன, அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், உடல் பருமன் டைப் 2 நீரிழிவு நோயையும் ஏற்படுத்தும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா?
- பிஸ்கட்டில் எந்த சத்துக்களும் இல்லை. பிஸ்கட்டில் நார்ச்சத்து மிகக் குறைவு. அவற்றை அதிகமாக சாப்பிட்டால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- பிஸ்கட்டில் தண்ணீரின் சதவீதமும் குறைவாக உள்ளது. இதனால் பிஸ்கட் அதிகம் சாப்பிடுவதால் உடல் வறட்சி அடையும்.
- பிஸ்கட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறைகிறது.
- அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுபவர்கள் இதய நோய் அபாயத்திலும் சிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே பிஸ்கட் சாப்பிட விரும்புபவர்கள் அவற்றால் ஏற்படும் உடல்நலக்குறைவை மனதில் வைத்து பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கட்டை ஒரே சமயத்தில் காலி செய்யாமல், ஒரு சில பிஸ்கட்களை மட்டுமே சாப்பிட்டலாம். அதுமட்டுமல்லாமல் தினமும் பிஸ்கட்டை ஸ்நாக்ஸாகச் சாப்பிடுவதை கைவிடுவதும் நல்லது.
Image Source: Freepik