பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- பெரும்பாலான பிஸ்கட் வகைகளில் கலோரிகள், சர்க்கரை மற்றும் கொழுப்புகள் அதிகம். இவை தினசரி உட்கொள்ளும் கலோரி அளவை அதிகரித்து, எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
- அதிக அளவு கொழுப்பு மற்றும் சோடியம் கார்டியோவாஸ்குலர் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- மேலும் சில வகையான பிஸ்கட்கள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இவை மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
- பிஸ்கட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக இருப்பதால், பிஸ்கட்களை அதிகமாக உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான மற்ற சத்துக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்தின்மை ஏற்படும்.
- பிஸ்கட்டில் உள்ள சர்க்கரை பற்களில் பிளேக் உருவாக காரணமாகிறது. இது பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது.
எந்த வகையான பிஸ்கட் சாப்பிடலாம்?
முழு தானிய பிஸ்கட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அவை செரிமானத்தை மேம்படுத்துகின்றன. சர்க்கரை இல்லாத பிஸ்கட்டில் சர்க்கரை குறைவாக உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்க இயலாது என்றாலும், அளவோடு சாப்பிடுவது அவசியம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது பிஸ்கட்டின் பக்க விளைவுகளை குறைக்கும். குழந்தைகளுக்கு சிறிய அளவில் பிஸ்கட் கொடுக்க வேண்டும். வீட்டில் பிஸ்கட் செய்து சாப்பிடுவது நல்லது.
Imag Source: Free
Disclaimer