Thu Oct 29, 2026 | 12:54 PM IST

Veg Pancake: குழந்தைகளுக்கு பிடித்த மினி வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி?

Veg Pancake: குழந்தைகளுக்கு பிடித்த மினி வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி?Veg Pancake: குழந்தைகளுக்கு பிடித்த மினி வெஜிடபிள் பான் கேக் செய்வது எப்படி?

Kids Lunch box Recipes In Tamil: உங்க குழந்தைகளுக்கு இப்படவும் ஒரே மாதிரியான சாப்பாடு செய்து கொடுத்து சலித்து போய்விட்டதா? பல வகையான காய்கறிகளை வைத்து சூப்பரான சுவையில் மினி வெஜிடபிள் பான் கேக் செய்து கொடுங்க. விரும்பி சாப்பிடுவது மட்டும் அல்ல, அடிக்கடி செய்யவும் சொல்லுவாங்க. வாங்க அட்டகாசமான சுவையில் மினி வெஜிடபிள் பான் கேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்
பொட்டுகடலை - 1/2 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 5 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
முட்டை கோஸ் - 1 கிண்ணம் துருவியது
கேரட் - 2 துருவியது
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் - தேவையான அளவு

மினி வெஜிடபிள் பான் கேக் செய்முறை:

  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
  • பச்சை மிளகாய், துருவிய முட்டை கோஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு உப்பு, மிளகு தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
  • பின்பு மற்றோரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட்டு அதில் கொத்தமல்லி இலை, கோதுமை மாவு, பொட்டு கடலையை மாவாக அரைத்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த மாவை சிறிதளவு ஊற்றி வட்டமாக அழுத்தி விடவும்.
  • பின்பு இரு பக்கமும் 3 நிமிடம் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு இறக்கினால், வெஜிடபிள் பேன் கேக் தயார்!

மினி வெஜிடபிள் பான் கேக் ஆரோக்கிய நன்மைகள்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

இரும்பு, பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாக காய்கறிகள் உள்ளன.

ஆக்ஸிஜனேற்ற மற்றும் நார்ச்சத்து

புதிய காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன.

புரதம்

முட்டை, உளுந்து மாவு மற்றும் தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த பொருட்களைக் கொண்டு காய்கறி அப்பத்தை தயாரிக்கலாம்.

புரோபயாடிக்குகள்

தயிர் புரோபயாடிக்குகளின் நல்ல மூலமாகும். இது உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மூளை-ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள்

கீரையில் லுடீன், ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது அறிவாற்றல் வீழ்ச்சியை மெதுவாக்க உதவும்.

கரோட்டினாய்டுகள்

கேரட் மற்றும் பிற சிவப்பு அல்லது ஆரஞ்சு காய்கறிகளில் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இது கண் நோய்கள் மற்றும் சில புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

→ Kollu Sadam: உடல் எடையை சட்டுனு குறைக்க உதவும் கொள்ளு சாதம் செய்வது எப்படி?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.