What are the instructions to eat sprouts: டயட்டில் இருக்கும் பலர் காலை உணவாக முளைகட்டிய பாசி பயறு மற்றும் முளைகட்டிய சுண்டல் சாப்பிடுவார்கள். குறிப்பாக ஜிம்மிற்கு செல்பவர்கள். ஏனென்றால், அதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும் இது, எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலைக் கட்டமைக்கவும் தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
அவற்றை உட்கொள்வது பல நோய்களின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்கான சரியான வழி தெரியாது. ஆயுர்வேதத்தின்படி, முளைகட்டிய பயறை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே அதன் முழுமையான பலனையும் பெற முடியும். நாம் செய்யும் சிறிய தவறுகள், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம் : sleeping tips: உங்களின் தூக்கத்தை கெடுக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!
முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்காக சரியான முறை குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சைதாலி ரத்தோர் விளக்கியுள்ளார். ஆயுர்வேதத்தில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்கு 3 விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். இவை ஆரோக்கியமானது என்றாலும், சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டியது அவசியம். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
முளைகட்டிய பயறு சாப்பிடுவதற்காக விதி

ஆயுர்வேதத்தின் படி முளைகட்டிய பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் சுண்டல் போன்றவற்றை எப்போதாவது எடுத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக, இவற்றை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். சாதாரண பீன்ஸ் மற்றும் தானியங்களை முளைகட்டிய தானியங்களுடன் சேர்த்தால், அவற்றிலிருந்து பெறப்படும் புரதம் மற்றும் கொழுப்பின் அளவுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
நமது உடல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இருப்பினும், முளைகட்டிய பயறு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அதனால், ஜீரணிக்க கடினமாக இருக்கும். உங்கள் உணவில் முளைகட்டிய பயிறை சேர்ப்பதற்கு முன் இந்த விதிகளை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Food Allergies: இந்த மொத்த உணவுகளும் அலர்ஜியை ஏற்படுத்தலாம் தெரியுமா?
- உங்கள் தினசரி வழக்கத்தில் முளைகட்டிய பயிறை சேர்க்க வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுங்கள். ஏனெனில், இது ஜீரணிக்க கடினமானது மற்றும் மாற்று பண்புகளை கொண்டது.
- முளைகட்டிய பயிறை சாப்பிடுவதற்கு முன் வேகவைக்கவும். பச்சையாக சாப்பிட வேண்டாம். வேக வைத்து சாப்பிடுவதால், இது எளிதில் ஜீரணமாகும்.
- முளைகட்டிய பயிறை சமைக்கும் போது செரிமான மசாலா, சீரக தூள், கருப்பு மிளகு, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்..
Pic Courtesy: Unsplash