Soya kola urundai: மீள் மேக்கர் வைத்து சுவையான கோலா உருண்டை செய்யலாமா?

  • SHARE
  • FOLLOW
Soya kola urundai: மீள் மேக்கர் வைத்து சுவையான கோலா உருண்டை செய்யலாமா?

தேவையான பொருட்கள்:

சோயா சங்கஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2.
தேங்காய் - ½ கப் (துருவியது)
பூண்டு - 4 பல்.
இஞ்சி - 1 இன்ச்.
சோம்பு - ½ ஸ்பூன்.
சீரகம் - ½ ஸ்பூன்.
மிளகு - 4.
முழு கரம் மசாலா (பட்டை – 1, கிராம்பு – 4, ஸ்டார் சோம்பு – 1, பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 1) அல்லது கரம் மசாலாப் பொடி.
பொட்டுக்கடலை - ¼ கப்
முந்திரி பருப்பு - 6
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இல்லை - ஒரு கொத்து.
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
கறிவேப்பிலை - ஒரு கொத்து.

இந்த பதிவும் உதவலாம் : குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

மீல்மேக்கர் கோலா உருண்டை செய்முறை:

  • முதலில், சோயா சங்க்ஸை வெது வெதுப்பான நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
  • பின்னர் தண்ணீரை பிழிந்துவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  • முதலில் மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஆனால், சோயா சங்ஸ்களை அதில் சேர்க்கக்கூடாது.
  • இவற்றை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் ஊறவைத்த சோயா சங்க்ஸ்களை நன்றாக பிசைந்து இந்த மசாலாவுடன் சேர்த்து பக்குவமாக அரைத்து கொள்ளவேண்டும். இப்போது, உப்பு சரி பார்த்துக்கொள்ளவேண்டும். சோலா உருண்டை மிக்ஸ் தயார்.
  • இதை கைகளில் எண்ணெய்தொட்டு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
  • உருட்டும்போது கவனமாக உருட்டவேண்டும். உருண்டை வெடித்துவிடக்கூடாது. நல்ல வழுவழுப்பாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : நிம்மதியான தூக்கத்திற்கு சமையலறையில் உள்ள இந்த 5 பொருட்கள் போதும்!

  • கடாயில் உருண்டைகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் பொரித்து எடுக்கவேண்டும்.
  • அடுப்பை தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். பரிமாறும் முன் கறிவேப்பிலையை வறுத்து அதில் சேர்க்கவேண்டும்.

மீல்மேக்கர் சாப்பிடுவதன் நன்மைகள்

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

மீல் மேக்கரில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இந்த சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை உடலுக்கு அதிகரிக்கும்.

எடை குறையும்

மீல் மேக்கரில் புரதம் நிறைந்துள்ளது. இது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தை குறைக்கிறது. மீல் மேக்கரில் உள்ள புரதம் உடல் கொழுப்பைக் குறைக்கும் மற்றும் எடையைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

கார்போஹைட்ரேட்டுகளை விட சோயா துண்டுகளை ஜீரணிக்க நமது உடல் அதிக சக்தியை செலவிடுகிறது. இதை, அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்பை கரைவதோடு எடையும் குறையும்.

இந்த பதிவும் உதவலாம் : Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!

மாதவிடாய் அறிகுறிகள்

குறிப்பாக மாதவிடாய் காலத்தில், பெண்கள் யோனி வறட்சி, மனநிலை மாற்றங்கள், தூக்கக் கலக்கம் மற்றும் இரவில் வியர்த்தல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். சோயா துண்டுகளில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன, இது மாதவிடாய் தாக்கத்தைக் குறைக்க உதவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகும்.

ஹார்மோன் சமநிலை

தொடர்ந்து சோயா துண்டங்களை உட்கொள்வது, ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது. இவற்றில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சீரான மாதவிடாய்க்கு உதவுகிறது. பிசிஓஎஸ் மற்றும் மாதவிடாய் நின்ற பின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீல் மேக்கர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

மீல் மேக்கரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Vallarai Keerai Benefits: வல்லாரை கீரையின் அற்புத நன்மைகள் இங்கே..

செரிமான அமைப்பு மேம்படும்

மீல் மேக்கர் குடலில் லாக்டோபாகில்லி மற்றும் பிஃபிடோபாக்டீரியாவின் அளவை அதிகரிக்கிறது. இந்த இரண்டு நுண்ணியிரிகளும் செரிமானத்திற்கு உதவுகின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

மீல் மேக்கரில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சோயா துண்டுகளை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் ஏணைய பலன்களை பெறலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு இதயப் பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

நிம்மதியான தூக்கத்திற்கு சமையலறையில் உள்ள இந்த 5 பொருட்கள் போதும்!

Disclaimer