Lady Superstar Nayanthara Hibiscus Tea Controversy: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையாக கிளம்பியது.
இந்த பதிவு குறித்து தி லிவர் டாக் என்று அழைக்கப்படும் கொச்சியைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் விமர்சித்துள்ளார். அப்படி நயன்தாரா பதிவிட்டிருந்தது என்ன? அதற்கு மருத்துவர் கொடுத்த பதில் என்ன? இது குறித்து விரிவாக காண்போம்.

செம்பருத்தி டீ குறித்து நயன்தாரா பதிவு
நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குறித்த பதிவில், செம்பருத்தி டீ ஆயுர்வேதத்தில் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் நீரிழிவு, கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களை நிர்வகிக்க உதவும் என்று வலியுறுத்தினார். இந்த கூற்றுகளை அவர் தனது ஊட்டச்சத்து நிபுணர் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த பதிவில் வைரலானது. இது சர்ச்சைக்கும் உள்ளானது.
இதையும் படிங்க: Hibiscus Tea: 30 வயதிலும் 18 வயது போல இளமையா இருக்கணுமா? இந்த டீயை குடியுங்க!
மருத்துவரின் விமர்சனம்
நயன்தாரா செம்பருத்தி டீ குறித்து பதிவிட்டிருந்ததற்கு எதிராக, தி லிவர் டாக் என்று அழைக்கப்படும் கொச்சியைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹெபடாலஜிஸ்ட் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் விமர்சித்துள்ளார். நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரங்களை வழங்காமல் நயன்தாரா தன்னை லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்தியதாக டாக்டர் பிலிப்ஸ் குற்றம் சாட்டியதால் சர்ச்சை அதிகரித்தது.
செம்பருத்தி டீ பற்றிய இத்தகைய சுகாதார கூற்றுகளை ஆதரிக்க இன்னும் வலுவான ஆராய்ச்சி தேவை என்று வாதிட்டார். டாக்டர் பிலிப்ஸ், உடல்நலக் கோரிக்கைகள் தொடர்பான பிரபலங்களின் ஒப்புதல்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டெலிட் செய்த நயன்
டாக்டர் பிலிப்ஸ் விமர்சனத்தை தொடர்ந்து, நயன்தாரா தனது பதிவை நீக்கியுள்ளார். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை. அதற்கு பதிலாக, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், முட்டாள்தனமான நபர்களுடன் வாதிடுவது பற்றிய மேற்கோளைப் பகிர்ந்து கொண்டார்.
“முட்டாள்களுடன் ஒருபோதும் வாதிடாதீர்கள். அவர்கள் உங்களை தங்கள் நிலைக்கு இழுத்துச் சென்று அனுபவத்தால் அடிப்பார்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார். இருவறும் மாறி மாறி இவ்வாறு பதிவிட்டது, இன்ஸ்டாகிராமில் பேசும் பொருளாக மாறியது.