கோடை காலம் தொடங்கியதில் இருந்தே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பழக்கடைகளில் தீயாய் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு காரணம் தர்பூசணி பழங்களில் செய்யப்படும் கலப்படமே ஆகும். கோடை காலம் வந்துவிட்டாலே ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்தது 4 தர்பூசணி கடைகளாவது முளைத்துவிடும். பார்க்க சிவப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும் தர்பூசணி பழங்களை மக்கள் போட்டி, போட்டு வாங்கிச் செல்வார்கள். ஆனால் உண்மையில், பார்க்க அழகாக இருக்கும் தர்பூசணி பழம் உங்கள் உடல் நலனுக்கே மிகப்பெரிய தீங்கிழைக்கக்கூடியது என்பது உங்களுக்குத் தெரியுமா?.
கோடை காலத்தில் நமக்குப் பிடித்தமான விஷயங்களில் இனிப்பான ஜூசி தர்ப்பூசணி பழங்களும் ஒன்று. இது புத்துணர்ச்சியூட்டுவதாகவும், நீரேற்றமளிப்பதாகவும், குளிர்ச்சியாக இருக்கவும், வெப்பத்தைத் தடுக்கவும் போதுமான ஊட்டச்சத்துக்களால் உங்களை நிரப்புகிறது. ஆனால், தர்பூசணியில் கலப்படம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம், தர்பூசணி பழத்தின் பிரகாசமான சிவப்பு நிறத்தை செயற்கையாகப் பயன்படுத்தி, பழுக்காத பழங்களை சந்தையில் குறைந்த விலையில் விற்க கடைக்காரர்கள் முயற்சிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கவலைப்பட வேண்டாம், நீங்கள் சாப்பிடும் தர்பூசணி பாதுகாப்பானதா மற்றும் ஆரோக்கியமானதா என்பதைக் கண்டறியவதற்கான எளிமையான டிப்ஸ்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்..
முக்கிய கட்டுரைகள்
தர்பூசணியின் நன்மைகள்:
நீரேற்றமாக வைத்திருக்கிறது - கோடைக்காலம் என்றால் உடலில் இருந்து நிறைய நீர் இழப்பு ஏற்படுவது வழக்கமானது. தர்பூசணி தண்ணீரைத் தக்கவைக்க உதவுகிறது.
சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் - தர்பூசணி இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். தர்பூசணியில் நார்ச்சத்து இருப்பதால் இந்த சிறப்பு குணம் உள்ளது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது - நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வீக்கத்தை நீக்குகிறது - உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அழற்சியின் பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுகின்றனர். தர்பூசணியின் தரம் அந்த வீக்கத்தை நீக்குகிறது.
நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் - வெப்பத்தில் மந்தமாக இருப்பது சகஜம். ஏனெனில் உடலில் நீரின் அளவு குறைகிறது. இதற்கிடையில், மூளை பெரும்பாலும் தண்ணீர். எனவே தர்பூசணி நீரின் அளவைப் பராமரிப்பதன் மூலம் நரம்புகளை வலுவாக வைக்கிறது.
எடை குறைக்க உதவுகிறது - தர்பூசணி எடை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
தர்பூசணியில் கலப்படம் இருப்பதைக் கண்டறிவது எப்படி? (How to check for adulteration in Watermelon)
செயற்கை சிவப்பு சாயம்:
தர்பூசணிகள் பழுத்த தோற்றமளிக்க எரித்ரோசின் என்ற சிவப்பு சாயம் சேர்க்கப்படுகிறது. இது ஒரு பருத்தி மூலம் அடையாளம் காணக்கூடியது.
உண்மையான தர்பூசணியின் சிவப்பு பகுதியில் பருத்தி துணியால் மெதுவாக தேய்த்தால் எந்த நிறமும் நீங்காது. ஆனால் போலி தர்பூசணி மீது பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு தெய்த்தால் அதில் சிவப்பு நிறம் ஒட்டிக்கொள்வதைக் காணலாம்.
சுவை குறைவது:
இயற்கையான தர்பூசணி அதன் சுவை மூலம் அடையாளம் காணக்கூடியது. சுவை குறையாது. ஆனால் கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணியில் இருந்து எந்த சுவையும் இருக்காது.
வேகமாக அழுகும்:
சிலர் தர்பூசணிகளை வாங்கி சேமித்து வைப்பார்கள். இயற்கையான தர்பூசணி பழங்கள் எளிதில் கெட்டுப்போகாது. ஆனால் ரசாயனம் செலுத்தப்பட்ட தர்பூசணி என்றால், விரைவில் அழுகிவிடும். தர்பூசணியை வாங்கி இரண்டு நாட்கள் குளிர்சாதன பெட்டிக்குப் பதிலாக வெளியே வைத்திருங்கள். ஒருவேளை அதில் ரசாயன கலப்படம் செய்யப்பட்டிருந்தால் சீக்கிரமாக அழுகிவிடும்.
ஒரு கடாயில் இதை முயற்சிக்கவும்:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடாக்கி, ஒரு துண்டு தர்பூசணி சேர்க்கவும். தண்ணீர் விரைவில் சிவப்பு நிறமாக மாறினால், தர்பூசணி சாயம் பூசப்பட்டது என்பதை அறியலாம்.