தேங்காய், தக்காளி சட்னியை மிஞ்சும் சுவையில் சூப்பரான புதிய சட்னி ரெசிபி!

  • SHARE
  • FOLLOW
தேங்காய், தக்காளி சட்னியை மிஞ்சும் சுவையில் சூப்பரான புதிய சட்னி ரெசிபி!

சிலருக்கு முட்டைக்கோஸ் பிடிக்காமல் போகலாம். அவர்கள் நேரடியாக சாப்பிடுவதை விரும்பவில்லையெனில், சட்னியாக செய்து உட்கொள்ளலாம். இதில் சுவை குறைவாகத் தான் இருக்கும். ஆனால் புளி சேர்ப்பதால் இது மாங்காய் சட்னியைப் போன்ற சுவையைத் தருகிறது. இந்த சட்னியை ஒருமுறை ருசித்தால் போதும். மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். இதை எளிதான முறையில் முட்டைக்கோஸை வதக்கும் போது அதிகம் வதக்காமல் சட்னியைத் தயார் செய்யலாம். அதிகம் வதக்கினால் சுவை மாறிவிடும். இந்த ரெசிபியில் புளிக்குப் பதிலாக எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ulunthu Milk: உளுத்தங்கஞ்சி குடிச்சி போர் அடிச்சிடுச்சா? உளுத்தம்பருப்பு பால் இப்படி செஞ்சி குடிங்க!

முட்டைக்கோஸ் சட்னி தயார் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

  • நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
  • உளுந்து – ஒரு ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 1
  • முட்டைகோஸ் – இரண்டரை கப்
  • புளி – சிறிதளவு
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்கத் தேவையான பொருள்கள்

  • நல்லெண்ணெய் - 1 அல்லது 2 ஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • கடுகு - கால் ஸ்பூன்
  • வர மிளகாய் - 2

முட்டைக்கோஸ் சட்னி செய்முறை

  • முதலில் கடாய் ஒன்றில் நல்லெண்ணெயை சேர்த்து சூடாக்கி, அதில் உளுந்து மற்றும் கடலை பருப்பை சேர்க்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும் (அதிகளவு தீயில் வதக்கினால் கருகி விடும்).
  • இதில் பச்சை மிளகாயை அவரவர்களின் கார அளவுக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். பின், கறிவேப்பிலை, முட்டைகோஸ் போன்றவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
  • முட்டைக்கோஸை வேக வைக்க விரும்பினால், வதக்கும் முன்னதாக வேக வைக்க வேண்டும். பின்னர், தண்ணீரை வடித்து விட்டு, வதக்கலில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் கடாயை மூடி சிறிது நேரம் வதங்கவிடவேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க

  • அவ்வப்போது மூடியைத் திறந்து பார்த்து, முட்டைக்கோஸை கிளறிவிட வேண்டும். முட்டைகோஸை வேகவைத்து சேர்க்கும் போது அது விரைவில் வதங்கிவிடும்.
  • முட்டைக்கோஸை வேகவைக்காமல் சேர்க்கும் போது சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே அதற்கு ஏற்றாற் போல் கிளறி, கடாயில் முட்டைக்கோஸ் ஒட்டினால், அதில் சிறிது தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும்.
  • இவ்வாறு வேகவைக்கும் போது முட்டைக்கோஸை முழுவதுமாக வேக வைக்கக் கூடாது. முட்டைக்கோஸ் கொஞ்சம் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். பின்னர் இதை ஆற வைக்கலாம்.
  • மிக்ஸியில் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால், தண்ணீர் தெளித்து சட்னியை அரைத்துக் கொண்டு, பின் மிக்ஸியிலிருந்து வேறு பாத்திரம் ஒன்றிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

தாளிக்கும் முறை

கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து பொரித்த பிறகு, இந்த தாளிப்பை அரைத்து வைத்த சட்னியில் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து டிபன் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

இந்த சூப்பரான மற்றும் சுவையான சட்னி மிகவும் ருசியாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் ராகி பணியாரம்! காரம், இனிப்பு என இரு சுவையிலும் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

How to Eat Curd: இரவில் தயிருடன் இவற்றை கலந்து சாப்பிட்டால் 2 மடங்கு நன்மை கிடைக்கும்!

Disclaimer