How to make jackfruit seed curry recipe: நாம் அனைவரும் விரும்பி உண்ணும் பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். சீசனுக்கு ஏற்ற பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். பொதுவாக மருத்துவர்களும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட பரிந்துரை செய்கின்றனர். அவ்வாறே உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களில் பலாப்பழமும் ஒன்று. நாம் பெரும்பாலும் பலாப்பழத்தை சாப்பிட்டு பழங்களை சாப்பிட்டு கொட்டைகளைத் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், இது போன்று நாம் தூக்கி எறியும் சில பழங்களின் விதைகள், கொட்டைகள் போன்றவையும் நமக்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். உண்மையில் சில பழங்களில் விதைகள், கொட்டைகளும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இதில் பலாப்பழ கொட்டையும் அடங்கும். பலாப்பழ கொட்டைகளிலும் ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கொட்டைகளை அன்றாட உணவில் பல்வேறு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான தேர்வாக பலாப்பழ கொட்டைகளைக் கொண்டு பலாப்பழ கொட்டை கறி ரெசிபியைத் தயார் செய்யலாம். இதில் பலாப்பழ கொட்டை கறி ரெசிபி செய்ய தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும் முறையைக் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Milagu Kuzhambu: சளி, இருமலை குணமாக்கும் மிளகு குழம்பு செய்வது எப்படி?
பலாப்பழக் கொட்டை கறி ரெசிபி செய்முறை
தேவையான பொருள்கள்
- பலாப்பழ கொட்டைகள் - 20 முதல் 25
- தக்காளி - 2
- மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2
- மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
- தேங்காய் - 1
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி அளவு
- உப்பு - தேவையான அளவு
பலா கொட்டை கறி செய்வது எப்படி?
முதலில் பலாக்கொட்டைகளில் உள்ள தோலை நீக்கிவிட்டு இரண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கொட்டைகளை ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா செய்யும் முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இந்த எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூன் சோம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு தக்காளி போன்றவற்றைச் சேர்த்து வதக்கலாம். இது நன்கு வதங்கிய பிறகு, அதில் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் மல்லித் தூள் போன்றவற்றைச் சேர்த்து கலந்து வதக்க வேண்டும். இது அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மசாலா தயாராகி விட்டது.
பலா கொட்டை கறி செய்முறை
கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயைச் சேர்த்து சூடாக்க வேண்டும். இதில் எண்ணெய் சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதை வதக்கிய பிறகு, ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்த்து வதக்கலாம். பிறகு வேக வைத்த பலாக்கொட்டை, அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். இது கொதித்த பிறகு அடுப்பை மெதுவாக வைத்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கலாம். இறுதியாக, பலாப்பழ கொட்டை ரெசிபியை சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி விடலாம்.
இப்போது கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில் அசத்தலான பலாப்பழ கொட்டை கறி ரெசிபி தயாராகி விட்டது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது தவிர, பலாக்கொட்டையை வைத்து இன்னும் பல விதமான ரெசிபிகளைத் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Jackfruit Seeds Benefits: இது தெரிந்தால் இனி பலாப்பழத்துடன் அதன் கொட்டையையும் சேர்த்து சாப்பிடுவீங்க!
பலாப்பழ கொட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமான ஆரோக்கியத்திற்கு
பலாக்கொட்டையில் போதுமான அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இது வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகும். இது நல்ல குடல் இயக்கங்களை ஆதரித்து செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலுக்கு ஆற்றல் அளிக்க
பலாக்கொட்டையானது கார்போஹைட்ரேட்டின் வளமான மூலமாகும். இது உணவை ஆற்றலாக மாற்றவும், நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த சோகையைத் தடுக்க
பலாப்பழ விதைகளில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஹீமோகுளோபினின் ஒரு அங்கமாக இரும்புச்சத்து அமைகிறது. எனவே இது இரத்த சோகை மற்றும் பிற இரத்தக் கோளாறுகளின் அபாயத்தை நீக்குகிறது. மேலும் இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தசைகளை வலுவாக்க
பலாப்பழ விதைகளில் உயர்தர புரதங்கள் உள்ளது. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிகளவிலான கால்சியம் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Karuvattu Kulambu: ஒரு முறை இப்படி கருவாட்டு குழம்பு வையுங்க.. தெருவே மணக்கும்!
Image Source: Freepik