Village style karuvadu kulambu Recipe in Tamil: நம்மில் பலருக்கு கருவாட்டு குழம்பு பிடிக்கும். ஆனால், நமது பாட்டி அல்லது அம்மா வைத்த சுவை எப்போதும் வருவது இல்லை. கொஞ்சம் கருவாட்டு குழம்பு இருந்தால் போதும், சட்டி சோறு இருந்தாலும் வயிற்றுக்கும் போகும் இடம் தெரியாது. குறிப்பாக பழைய சாதம். கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு வைப்பது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். கருவாடு பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் கருவாடு - 200 கிராம்
கத்திரிக்காய் - 6 நறுக்கியது
முருங்கைக்காய் - 2
தண்ணீர் - 2 கப்
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 1 கப்
கறிவேப்பில்லை - 1 கொத்து
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 கீறியது
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
புளி கரைசல் - 1 கப்
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: Millet Bisi Bele Bath: இந்த முறை அரிசி வேண்டாம்.. தினையை வைத்து பிசிபெல்லா பாத் செய்து கொடுங்க!
கருவாட்டு குழம்பு செய்முறை:
- பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கருவாடு துண்டுகளை அதனுள் போட்டு மூடி வைக்கவும்.
- மண் சட்டியில் நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பின் இதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
- அடுத்து இதில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- அடுத்த இதில் புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- காய்கறிகள் வெந்த பின் கருவாடு துண்டுகளை போட்டு மேலும் 15 நிமிடங்களுக்கு கடாயை மூடி கொதிக்கவிட்டால் கருவாட்டு குழம்பு தயார். 15 நிமிடங்களுக்கு இதை மூடி வைத்து பின் சுடு சாதத்துடன் பரிமாறவும்.
இந்த பதிவும் உதவலாம்: Mughlai Chicken Biryani: வீட்டிலேயே அட்டகாசமான முகலாய் சிக்கன் பிரியாணி செய்யலாமா?
கருவாடு சாப்பிடுவதன் நன்மைகள்:
புரதம்: உலர்ந்த மீனில் அதிக புரதம் உள்ளது. அதன் கலோரிகளில் 87% வரை புரதத்திலிருந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் உலர்ந்த மீனில் 18 கிராம் புரதம் உள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: EPA மற்றும் DHA போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உட்பட, ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாக உலர்ந்த மீன் உள்ளது. இந்த கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். மேலும், இரத்த நாளங்களை சுத்தம் செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: உலர்ந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், அயோடின், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியம்.
இந்த பதிவும் உதவலாம்: Paneer Biryani: நீங்க சைவமா? சிக்கன் சுவையை மிஞ்சும் பன்னீர் பிரியாணி செய்யலாமா?
கொழுப்பு குறைவாக உள்ளது: மற்ற புரத மூலங்களுடன் ஒப்பிடும்போது, உலர்ந்த மீனில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது.
சேமிக்க எளிதானது: உலர்ந்த மீனை அறை வெப்பநிலையில் சேமிக்க முடியும். மேலும், மற்ற பொருட்களுடன் கையாளவும் கலக்கவும் எளிதானது.
Pic Courtesy: Freepik