Millet Bisi Bele Bath In Tamil: நம்மில் பலருக்கு பிசிபெல்லா பாத் பிடிக்கும். சாம்பார் தனியாகவும், சாதம் தனியாகவும் வைக்காமல் மொத்தமாக சாம்பார் சாதமாக வைத்து சாப்பிடுவது இன்னும் சுவையானது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை இன்னும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற, இந்த முறை அரிசிக்கு பதில் தினையை வைத்து பிசிபெல்லா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். வாருங்கள், சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தினை பிசிபெல்லா பாத் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாம்பார் தூள் செய்ய
நெய் - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 6
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: Rose Milk Cake: கிறிஸ்மஸ் வந்தாச்சு.. வீட்டிலேயே சுவையான ரோஸ் மில்க் கேக் செய்யலாமா?
சாம்பார் செய்ய
நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப்
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் - 5 நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
முருங்கைக்காய் - 1 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/2 கப்
அரைத்த சாம்பார் மசாலா - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பில்லை - ஒரு கொத்து
தினையை வேகவைக்க
தினை - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/3 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தினை பிசிபெல்லா பாத் செய்முறை:
- தினையை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுத்து சாம்பார் மசாலா தூள் செய்ய, ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மசாலாக்கள் நிறம் மாறியவுடன், இதில் துருவிய தேங்காய் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வறுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறியபின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
- அடுத்து சாம்பார் செய்ய, ஒரு கடாயில் நெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.
- வெங்காயம் சிறிது வதங்கியவுடன், இதில் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
- காய்கறிகளுடன் சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- அடுத்து இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
- காய்கறிகள் வெந்தவுடன், புளிக்கரைசல் மற்றும் அரைத்த சாம்பார் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
- சேர்த்த மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு சாம்பாரை இறக்கவும்.
- அடுத்து ஒரு பிரஷர் குக்கரில் ஊறிய தினை, துவரம் பருப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
- செய்த சாம்பாரை மீண்டும் சூடு செய்து, இதனுடன் வேகவைத்த தினை மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறினால் ஆரோக்கியமான தினை பிசிபேளாபாத் தயார்.
தினை பிசிபெல்லா பாத் ஆரோக்கிய நன்மைகள்:
பசையம் இல்லாதது: செலியாக் நோய் அல்லது பசையம் உணர்திறன் உள்ளவர்களுக்கு தினை ஒரு பாதுகாப்பான தேர்வாகும்.
குறைந்த கிளைசெமிக் குறியீடு: தினைகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்க உதவும்.
அதிக சத்துக்கள் கொண்டது: தினை புரதம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். மற்ற தானியங்களை விட அவை அதிக அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.
இதய ஆரோக்கியம்: தினை இருதய நோய் (CVD) அபாயத்தைக் குறைக்க உதவும். அவற்றில் மெக்னீசியம் உள்ளது. இது இதய தாளத்தை சீராக்க உதவுகிறது மற்றும் வைட்டமின் பி 3, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்: தினைகளில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. குடலில் புரோபயாடிக்குகளின் வளர்ச்சியைத் தூண்டும் ப்ரீபயாடிக்குகளும் அவற்றில் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Palak paneer idli: சுவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் சூப்பரான பாலக் பனீர் இட்லி! இப்படி செஞ்சி பாருங்க
மூளை ஆரோக்கியம்: ஃபாக்ஸ்டெயில் தினையில் பல வகையான வைட்டமின் பி உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
எடை இழப்பு: தினைகள் குறைந்த கலோரி அளவைக் கொண்டிருக்கின்றன. மேலும், நீண்ட நேரம் முழுதாக உணர உதவும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள். மேலும், OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
Pic Courtesy: Freepik