பற்களுக்கு பலம் தரும் பொரிவிளங்கா உருண்டை! உங்க வீட்டில் இப்படி ஈஸியா செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
பற்களுக்கு பலம் தரும் பொரிவிளங்கா உருண்டை! உங்க வீட்டில் இப்படி ஈஸியா செய்யுங்க

இந்த உருண்டை எளிதில் உடைக்கக் கூடியதாகவும், இதைக் கடித்து வாயில் சிறிது நேரம் ஊறவைத்து மெல்லலாம். 70 மற்றும் 80களின் முக்கியமான தின்பண்டங்களில் ஒன்றாக இந்த பொரிவிளங்காய் உருண்டை அமைகிறது. இந்த உருண்டையில் அதிக மாவுச்சத்து நிறைந்துள்ளது. இதில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதைச் செய்யும் போது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். அப்போது தான் பதத்திற்கு ஏற்றாற் போல வரும். இதில் பொரிவிளங்கா உருண்டை தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sesame Seeds Laddu: எள்ளு லட்டு இப்படி செஞ்சி பாருங்க… ரொம்ப நல்லது.!

பொரிவிளங்கா உருண்டை செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

  • பாசிப்பயறு - 2 கப்
  • பொட்டுக்கடலை - அரை கப்
  • வெள்ளை முழு உளுந்து - கால் ஸ்பூன்
  • புழுங்கல் அரிசி - அரை கப்
  • வெல்லம் - ஒன்றரை கப் (பொடியாக நுணுக்கப்பட்டது)
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • சுக்குப்பொடி - கால் டீஸ்பூன்
  • ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்

பொரிவிளங்கா உருண்டை செய்யும் முறை

  • முதலில் கடாய் ஒன்றில் அரிசி மற்றும் பாசிப்பயறு இரண்டையும் தனித்தனியாக சேர்த்து நன்றாக சிவந்து வாசம் வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, பாசிப்பயறுடன் கால் ஸ்பூன் வெள்ளை முழு உளுந்து போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்க்கும் போது தான் பயிறு சிவப்பது நன்றாகத் தெரியும்.
  • அதன் பிறகு பொட்டுக்கடலையைச் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளலாம். பின்னர், தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றி சிவக்கும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துண்டுகளாக்கியும். அதைச் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதைக் காயவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து வறுத்த அரிசி, பாசிப்பயறு ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ragi Soup Recipe: ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடல் எடை குறைப்பு வரை எல்லா பிரச்சினைக்கும் இந்த ஒரு சூப் போதும்!

  • பாத்திரம் ஒன்றில் அரைத்த மாவு, வறுத்த பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் அல்லது துண்டுகள், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி என அனைத்தையும் சேர்தது நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அடிக்கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் வெல்லம் சேர்த்து, அதனுடன் அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடலாம். இதில் வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்த பிறகு வடிகட்டலாம்.
  • இதை மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.
  • இதை இரு முறை காய்ச்சுவதற்கான காரணம், வெல்லத்தில் இருக்கும் தூசிகள் பாகில் வரக்கூடாது என்பதற்காகவே தான். இவ்வாறு பாகு காய்ச்சும் போது, அடுப்பைக் குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும்.
  • பிறகு தட்டு ஒன்றை எடுத்து, அதில் 3 அல்லது 4 கரண்டி மாவைச் சேர்த்து, அதன் மேல் இரண்டு ஸ்பூன் வெல்லப்பாகுவை ஊற்றி, ஒரு ஸ்பூனால் கலந்து, உடனடியாக உருண்டை பிடிக்க வேண்டும்.
  • இந்த மாவு, பாகு இரண்டையும் சரியான அளவு சேர்த்து அனைத்து மாவையும் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம். பாகு சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவுக்கு வரும் வரை பார்த்து சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.
  • இந்த உருண்டை கெட்டியாக இருப்பதால், இது கெட்டி உருண்டை என்றழைக்கப்படுகிறது. இதைக் கடித்து சாப்பிடுவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், இது சுவை நிறைந்ததாகும்.
  • தினமும் ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • இதைக் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே விரும்பி உட்கொள்வர்.

இவ்வாறு எளிமையான முறையில், பொரிவிளங்கா உருண்டையை செய்யலாம். இதை ஒரு முறை உட்கொண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Paratha Benefits: குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ரூட் பரோட்டா செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Thuthi Ilai: மோசமான மூல நோயை கூட ஒரே வாரத்துல சரிசெய்யும் துத்தி இலை… பயன்கள் இங்கே!!

Disclaimer

குறிச்சொற்கள்