$
Benefits Of Beetroot Paratha: உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் காய்கறிகளின் கலவையை பெரும்பாலும் மக்கள் சாப்பிட விரும்புவதில்லை. அதே சமயம் புரோட்டா, நூடுல்ஸ் உள்ளிட்ட உடலுக்குக் கேடு தரும் உணவுகளைத் தவிர்ப்பது இல்லை. அந்த வகையில் பீட்ரூட்டை சாலட் வடிவில் சாப்பிடுவதற்கு பலரும் தவிர்க்கின்றனர். ஆனால் இவ்வாறு தவிர்க்கும் பீட்ரூட்டில் நல்ல அளவிலான நார்ச்சத்துக்கள், இரும்பு, மாங்கனீஸ், பொட்டாசியம் வைட்டமின் சி, ஃபோலேட் போன்றவை நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இதனை உண்பதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி, சருமப் பொலிவையும் பெறலாம். இந்த பீட்ரூட் பயன்படுத்தி, பரோட்டா செய்து உண்ணலாம். இப்போது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும் பீட்ரூட் பரோட்டா நன்மைகள் குறித்தும், அதன் செய்முறையையும் காணலாம்.
பீட்ரூட் பரோட்டா செய்முறை
அருமையான சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய பீட்ரூட் பரோட்ட செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Walnut Recipes: சுவையான மற்றும் ஆரோக்கியமான வால்நட்ஸ் ரெசிபிகள் எப்படி செய்யலாம்?
பீட்ரூட் பரோட்டா செய்யத் தேவையானவை
- கோதுமை மாவு – 1 கப்
- பீட்ரூட் – 2 பெரியது (துருவியது)
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- செலரி – அரை தேக்கரண்டி
- இஞ்சி – அரை டீஸ்பூன் (துருவியது)
- பெருஞ்சீரகத் தூள் – நான்கில் ஒரு தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு

பீட்ரூட் பரோட்டா தயாரிக்கும் முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் கோதுமை மாவை எடுக்க வேண்டும்.
- அதில் பீட்ரூட், பெருங்காயத்தூள், துருவிய இஞ்சி, செலரி, பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து ரொட்டி போன்ற மென்மையான மாவை பிசைய வேண்டும்.
- இப்போது மாவை உருண்டையாகச் செய்து விரும்பிய வடிவில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
- அதைச் சூடாக கடாயில் ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சுவையான பீட்ரூட் பரோட்டா தயாராகி விடும்.
- இதனை பச்சைச் சட்னி அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
- அதே போல, பீட்ரூட் பரோட்டா செய்யும் போது அதிக அளவிலான நெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம்.
இந்த பதிவும் உதவலாம்: Moringa Health Benefits: இது தெரிஞ்சா முருங்கையை சாப்பிடாதவங்க கூட சாப்பிடுவாங்க
பீட்ரூட் பரோட்டா தரும் நன்மைகள்
பீட்ரூட் பரோட்டாவில் சேர்க்கப்பட்ட பொருள்கள் தனித்தனியே முறையே பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.
- பீட்ரூட் பரோட்டா சாப்பிடுவதன் மூலம், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.
- குறிப்பாக இந்த பரோட்டா தயாரிக்க மைதாவுக்குப் பதில் கோதுமை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையைக் குணமாக்குவதுடன், செரிமான மேம்பாட்டிற்கு உதவுகிறது.
- இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தவும், வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.
- பெருஞ்சீரகத் தூள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது வாயு பிரச்சனையைத் தடுத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- இதில் பயன்படுத்தப்படும் செலரியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவற்றை உட்கொள்வது வயிற்று வலி, மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.

இந்த பல்வேறு நன்மைகளைக் கொண்ட பீட்ரூட் பரோட்டை எளிய முறையில் செய்து உண்ணலாம். இது சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்ணுவர். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கப் பெறும்.
இந்த பதிவும் உதவலாம்: Arthritis Juicing: மூட்டு வலி உள்ளவர்கள் ஜூஸ் அருந்துவதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை
Image Source: Freepik