Healthy Walnut Recipes: சுவையான மற்றும் ஆரோக்கியமான வால்நட்ஸ் ரெசிபிகள் எப்படி செய்யலாம்?

  • SHARE
  • FOLLOW
Healthy Walnut Recipes: சுவையான மற்றும் ஆரோக்கியமான வால்நட்ஸ் ரெசிபிகள் எப்படி செய்யலாம்?

வால்நட் ரெசிபிகள்

பருவகால பழங்கள், கலிபோர்னியா வால்நட்ஸ் மற்றும் இன்னும் சில முக்கிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எளிய மற்றும் சுவையான ரெசிபிகளை இதில் காண்போம்.

வால்நட் சல்சாவுடன் ஃபுரூட் கபாப்ஸ்

செஃப் சப்யாசாச்சி கோரை அவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வகை ரெசிபி இனிப்பு வகையாகும். இந்த ரெசிபி செய்ய தேவையானவை மற்றும் செய்முறை குறித்த விவரங்களை இதில் காணலாம்.

தேவையான பொருள்கள்

எண்ணெய் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – 50 கிராம்
Zest மற்றும் சாறு – 1 லைம்
கலிபோர்னியா வால்நட் பருப்புகள் (நறுக்கப்பட்டது) – 50 கிராம்
ஸ்ட்ராபெர்ரிகள் – 4 (பெரியது)
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் சதை முலாம்பழம் – 250 கிராம் (கியூப்ஸாக நறுக்கப்பட்டது)
வாழைப்பழம் – 1 (பெரியது - 4 துண்டுகளாக வெட்டப்பட்டது)

செய்முறை

  • சிறிய வாணலி ஒன்றில் எலுமிச்சைச் சாறு மற்றும் 4 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து, சர்க்கரை நன்றாக கரையும் வரை மெதுவாக சூடாக்க வேண்டும்.
  • இது ஒரு கொதிநிலைக்கு வந்தவுடன் 2 நிமிடங்கள் அல்லது வெளிர் தங்க நிறத்தில் மாறும் வரை கொதிக்க வைக்கவும். பின், வால்நட்ஸ் உடன் லைம் Zest-ஐச் சேர்த்து நன்றாகக் கிளறி தனியாக வைக்கவும்.
  • பழத்தை 4 மர குச்சிகளில் திரிக்க வைத்து சிறிது எண்ணெயுடன் துலக்கி அதன் ஒவ்வொரு பக்கத்திலும் 2-3 நிமிடங்கள் கிரிடில் பாத்திரம் அல்லது BBQ-ல் வைக்கவும்.
  • பின், வால்நட் சல்சாவுடன் சேர்த்து விரும்பினால் லெமன் சர்பெட் அல்லது கிரீக் தயிர் சேர்த்து பரிமாறலாம்.

குறிப்பு:

வால்நட் சல்சா மற்றும் கபாப்-ஐ முன்கூட்டியே தயார் செய்து தேவைப்படும் போது BBQ-ல் வைத்துக் கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

வால்நட், கோடைக்கால பழங்கள் மற்றும் மியூஸ்லி டம்பிள்

செஃப் சப்யசாச்சி கோரையின் இந்த ரெசிபி அற்புத சுவையுடன் கூடிய ரெசிபி ஆகும். இதில் தேவையான பொருள்கள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.

தேவையான பொருள்கள்

ஆரஞ்சு – 2 பெரியது
கிவி – 1 (உரித்து நறுக்கப்பட்டது)
கலிபோர்னியா வால்நட்ஸ் – 25 கிராம் (நறுக்கப்பட்டது)
விதையற்ற சிவப்பு மற்றும் பச்சை திராட்சை – 25 கிராம் (பாதியாக வெட்டப்பட்டது)
எலுமிச்சை தயிர் – 100 கிராம்
மியூஸ்லி மற்றும் ஓட்ஸ் – 50 கிராம்

செய்முறை

  • ஆரஞ்சுப் பழத்தின் முனைகளை வெட்டி, கத்தியால் தோலை அகற்றவும். பிறகு ஒரு பாத்திரத்தில் இதன் சாறுகளை எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள பழத்தில் ஆரஞ்சு துண்டுகளை மட்டும் சேர்க்க வேண்டும்.
  • வால்நட்ஸ், பழங்கள், தயிர், மற்றும் மியூஸ்லி போன்றவற்றைச் சேர்த்து பரிமாறவும்.

இந்த பதிவும் உதவலாம்: அதிக உப்பு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கலிபோர்னியா வால்நட் மற்றும் சன்னா சாட்

செஃப் ஷூமைலா சௌஹானின் சன்னா, வால்நட் மற்றும் இன்னும் சில பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரெசிபி தயாரிக்கும் முறை பற்றிக் காணலாம்.

தேவையான பொருள்கள்

கருப்பு கொண்டைக் கடலை – 1 கப்
வால்நட் பருப்புகள் – 1 கப் (நறுக்கியது)
இஞ்சி – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி
புளி கூழ் – ¼ கப்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வறுத்த சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தூள் – 1 தேக்கரண்டி
தக்காளி - 1 (நன்கு நறுக்கப்பட்டது)
வெங்காயம் – 1 (நன்கு நறுக்கப்பட்டது)
பச்சை மாம்பழம் – ½ (நறுக்கியது) (விரும்பினால் சேர்க்கலாம்)
வெள்ளரி – 2 தேக்கரண்டி (நன்கு நறுக்கப்பட்டது)
கிரீன் சட்னி – 1 தேக்கரண்டி
சாட் மசாலா – ½ தேக்கரண்டி
சர்க்கரை – 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கருப்பு கொண்டைக்கடலையை 4 கப் தண்ணீரில் குறைந்த 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பின், குக்கரில் கொண்டைக்கடலை மென்மையாகும் வரை சமைக்கவும். அதாவது 1 விசில் வரும் வரை சமைக்கவும். பிறகு, மிதமான வெப்பத்தில் 15 நிமிடங்கள் வைக்கவும்.
  • பிறகு, குக்கரில் விசில் அடங்கும் வரை காத்திருந்து தண்ணீரை வடிகட்டி, கொண்டைக்கடலைத் தனியாக வைக்கவும்.
  • பின், கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் வேகவைத்த கொண்டைக்கடலை, இஞ்சி, கொத்தமல்லித்தூள், பச்சை மிளகாய், வால்நட்ஸ் போன்றவற்றைச் சேர்க்கவும். இவற்றை சுமார் 1 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு உப்பு, புளி கூழ், மற்றும் சிவப்பு மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான வெப்பத்தில் 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
  • அதன் பிறகு, எலுமிச்சைச் சாறு, வறுத்த சீரக தூள், சாட் மசாலா, வெள்ளர், வெங்காயம், பச்சை சட்னி, பச்சை மாம்பழம், சர்க்கரை போன்றவற்றைக் கலந்து பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

Image Source: Freepik

Read Next

Mango Lassi Benefits: சுவை தரும் மாம்பழ லஸ்ஸியில் இத்தனை நன்மைகளா?

Disclaimer

குறிச்சொற்கள்