How to make ragi idiyappam recipe: தமிழில் கேழ்வரகு என அழைக்கப்படும் ஒரு வகை தானியமான ராகி உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. பழங்காலத்தில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகை உணவுகளே பிரபலமாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் ஜங்க் ஃபுட், வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகள் போன்ற உணவுகளின் மீதே அதிக நாட்டம் கொள்கின்றனர். உண்மையில் இந்த உணவுகள் உடலுக்குக் கேடு விளைவிக்கலாம்.
இதைத் தவிர்க்க, நாம் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். இதில் ராகியும் அடங்கும். ராகி உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தானியமாகும். அன்றாட உணவில் ராகியைப் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இதில் ராகியைக் கொண்டு ராகி இடியாப்பம் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறையைக் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் ராகி பணியாரம்! காரம், இனிப்பு என இரு சுவையிலும் செய்யுங்க
ராகி இடியாப்பம் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
முக்கிய கட்டுரைகள்
- ராகி மாவு - 2 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - கால் டீஸ்பூன்
- சூடான நீர் - 2 கப்
- சர்க்கரை - 3 டீஸ்பூன்
- பால் - அரை கப்
- ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
ராகி இடியாப்பம் செய்முறை
- ராகி இடியாப்பம் தயார் செய்வதற்கு முதலில் ராகி மாவை எடுத்துக் கொண்டு அதில் நெய் மற்றும் உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வருவது போல பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிறகு இதில் சூடான தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு போல மெல்லிய பதத்தில் பிசைத்துக் கொள்ளலாம்.
- இப்போது இந்த மாவை பாத்திரத்தில் ஊற்றி, சற்று கெட்டியான கலவையாக மாறும் வரை கலக்க வேண்டும்.
- அதன் பிறகு, இந்தக் கலவையை 5 நிமிடம் ஆறவைக்கலாம். பின் கைகளில் எண்ணெய் தடவி 4-5 நிமிடம் நன்கு பிசையலாம்.
- பின்னர் இதை சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இடியாப்பம் பிழியும் உருளையை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தயார் நிலையில் வைக்க வேண்டும்.
- பிறகு இதில் நாம் செய்து வைத்த கலவையைப் போட வேண்டும். பின் வாழை இலை அல்லது எண்ணெய் பூசப்பட்ட தட்டில் அடுக்குகளில் சிறிய அல்லது பெரிய இடியாப்பங்களாக பிழிந்து கொள்ளலாம்.
- ராகி இடியாப்பத்தை மிதமான தீயில் வேக வைக்கலாம். இடியாப்பம் வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். இதை சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகள் விரும்பும் சுவையான, ஹெல்த்தியான செவ்வாழை அம்மினி கொழுக்கட்டை! இப்படி செஞ்சி கொடுங்க!
- பிறகு ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளலாம். இதில் ஏலக்காய் தூளையும் சேர்த்து இறக்கி விடலாம்.
- இந்த சிறிது ஆறிய இடியாப்பத்தை ஒரு தட்டில் எடுத்து, சூடான பாலை அதில் ஊற்றி, முழு இடியாப்பத்தையும் பாலில் ஊற்றி விடலாம்.
- இதில் சிறிது நாட்டுச்சர்க்கரை மற்றும் பச்சை தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து சூப்பரான ராகி இடியாப்பத்தைத் தயார் செய்யலாம்.
- பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட பிடிக்காதவர்கள் இடியாப்பத்தை காரமான கறியுடன் சாப்பிடலாம். இது சிறந்த காலை உணவாகும்.
ராகி இடியாப்பம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
ராகியில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். ராகியில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள புரதச்சத்துக்கள் நீண்ட நேரம் முழுமையான உணர்வைத் தருவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இது தவிர, ராகியில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது உடலில் செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் சருமத்தை பளபளப்பாகவும், இளமை தோற்றத்தையும் தருகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Ragi Roti: கிடுகிடுனு வெயிட்டு குறைய.. காலை உணவாக ராகி ரொட்டி சாப்பிடவும்..