How to make mango custard sorbet in tamil: கோடைக்காலம் அனைவருக்கும் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய காலமாகும். குறிப்பாக, இந்த காலத்தில் ஏற்படக்கூடிய நீரிழப்பு காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். எனவே உடலை நீரேற்றமாக வைப்பதற்கு கடைகளில் விற்பனை செய்யக்கூடிய பழச்சாறுகள், குளிர்ந்த பானங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், எளிமையான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்யப்படும் பானங்களைக் கொண்டு நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
கோடைக்காலத்தில் ஸ்பெஷலாக விளங்கும் மாம்பழத்தை வைத்தே இந்த எளிய பானத்தைத் தயார் செய்யலாம். மாம்பழம் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதால் இதை வீட்டிலேயே தயார் செய்வது உடலுக்கும் மிகுந்த நன்மை பயக்கும். அவ்வாறு இந்த கோடை வெப்பத்தில் உடல் சூட்டைத் தணிக்கவும், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் மாம்பழ கஸ்டர்டு சர்பத் தயார் செய்யலாம். இதில் மாம்பழ கஸ்டர்டு சர்பத் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Rava Kesari: மாங்காய் சீசன் வந்தாச்சு... குழந்தைகளுக்கு பிடித்த சுவையான மாம்பழ கேசரி செய்யலாமா?
மாம்பழ கஸ்டர்டு சர்பத் செய்வது எப்படி?
தேவையானவை
முக்கிய கட்டுரைகள்
- அல்போன்சா மாம்பழம் - 2
- சர்க்கரை - 1/2 கப்
- வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் - 2 1/2 மேசைக்கரண்டி
- சேமியா - 1/2 கப்
- ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸ்
- சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
- முழுகொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
மாம்பழ கஸ்டர்டு சர்பத் செய்முறை
- முதலில் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிரிஸ்டல்ஸில் 3 டீ கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதை சுமார் 1 மணி நேரம் அப்படியே வைக்கலாம்.
- இரண்டு மாம்பழங்களை எடுத்துக் கொண்டு, அதன் தோலை உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாடியில் நன்றாக விழுதாக அரைக்க வேண்டும். பிறகு, இதை பேஸ்ட்டைத் தனியாக வைத்துக் கொள்ளலாம்.
- ஒரு பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் பாலைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் சூடான பிறகு, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கலாம். பின்னர் தனியாக பாலுடன் கஸ்டர்டு பவுடரை எடுத்துக் கலக்கவும். இந்த கரைத்த கஸ்டர்டு பாலை அடுப்பில் கொதிக்கும் பாலுடன் கலக்கலாம்.
- இதை மிதமான தீயில் வைத்து, பாலை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இதை இடைவெளியில் கிளறிக்கொண்டே இருக்கலாம். கஸ்டர்டு வெந்த பிறகு, அதில் மாம்பழ கூழ் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை 2 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைத்து, பின் அடுப்பை அணைத்து விடலாம்.
- அதன் பிறகு, கலவையை முழுவதுமாக ஆறவைத்து, பின்னர் 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். சப்ஜா விதைகளை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின், ஜெல்லியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேமியாவை சேர்க்க வேண்டும். அது முழுமையாக வேகும் வரை சமைத்து, பின்னர் வடிகட்டலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Burfi: மாம்பழத்தை பச்சையா சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்போ பர்ஃபி செய்து சாப்பிடுங்க!
- இப்போது ஒரு கிளாஸில் சமைத்த சேமியாவைச் சேர்த்து அதன் மேல் சிறிது ஊறவைத்த சப்ஜா விதைகளைச் சேர்க்க்க வேண்டும். இப்போது ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி சேர்த்து, இறுதியாக மாம்பழ கஸ்டர்டை ஊற்ற வேண்டும். இப்போது சுவையான மாம்பழ கஸ்டர்டு சர்பத்தை பரிமாறலாம்.
- இதில் இறுதியாக நறுக்கிய கொட்டைகள், நறுக்கிய பிஸ்தா, பாதாம் மற்றும் மாம்பழத் துண்டுகளைச் சேர்ப்பது கூடுதல் சுவையைத் தருகிறது. இவ்வாறு எளிமையான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்த மாம்பழ கஸ்டர்டு சர்பத் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும் இனிமையான பானமாக அமைகிறது.
மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- மாம்பழம் சுவையானது மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகவும் அமைகிறது. இதில் வைட்டமின் ஏ,சி போன்றவை உள்ளன. மேலும் இது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- கூடுதலாக, மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
- மாம்பழம் இனிப்பான சுவையைக் கொண்டிருப்பினும், இது மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இதை மிதமாக உட்கொள்ளும் போது பெரும்பாலான உணவு வகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
- எனினும் எடை அதிகரிப்பு அல்லது இரத்த சர்க்கரை பற்றி கவலைப்படாமல் மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்க, மாம்பழத்தை சீரான உணவின் ஒரு பகுதியாக, அளவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்க்க, ஒரு மாம்பழத்தை மட்டும் சாப்பிடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Mangoes in Summer: வெயிலில் மாம்பழம் சாப்பிடும் போது இதை நியாபகம் வச்சுக்கோங்க, மாம்பழம் நன்மைகள்!