Seeds During Summer: வெயில்ல உடம்பு சூட்டைத் தணிக்க சாப்பிட வேண்டிய விதைகள்

  • SHARE
  • FOLLOW
Seeds During Summer: வெயில்ல உடம்பு சூட்டைத் தணிக்க சாப்பிட வேண்டிய விதைகள்

உடலில் உள்ள வெப்பத்தைக் குறைக்க உதவும் விதைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதற்கு விதைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது தினமும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். இதில் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும் விதைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skipping Dinner Benefits: இரவில் சாப்பிடாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

உடல் வெப்பத்தைக் குறைக்கும் விதைகள்

சோம்பு

சிறிய விதையான சோம்பு குளிர்ச்சி தன்மை கொண்டதாகும். இந்த விதைகளில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் வெப்பம் சம்பந்தமான பாதிப்புகளைத் தடுக்கிறது. பொதுவாக கோடைக்காலத்தில் பலரும் அஜீரணக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் சோம்பு விதைகளை அவ்வப்போது வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

சப்ஜா விதைகள்

இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. கோடைக்காலத்தில் அதிக உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள், சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து சிறிய எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்து வருவது உடலில் உள்ள சூட்டை விரைவில் குறைக்கலாம். இது தவிர, சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்வது அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் சரும பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

கொத்தமல்லி விதைகள்

கொத்தமல்லி விதைகளை உட்கொள்வது செரிமான அமைப்பை சுத்தப்படுத்துவதுடன், கோடைக்கால காயங்களைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த விதைகளுக்கு உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கும் சக்தி உள்ளது. இந்த கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் அந்த தண்ணீரைக் குடிப்பது உடல் வெப்பநிலை உடனடியாகக் குறைக்கப்படும். இதன் காரணமாகவே காய்ச்சல், ஜலதோஷம் போன்றவை ஏற்படும் போது கொத்தமல்லி விதையை எடுத்துக் கொள்வர்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Vs Tender Coconut: இளநீர் vs தேங்காய் நீர். எது உடம்புக்கு நல்லது தெரியுமா?

வெந்தயம்

உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், காலையில் எழுந்த பிறகு வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம். இது உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது. மேலும், வெந்தயமானது உடலில் ஏற்படும் வெப்பத்தால் அரிப்பு, கொப்புளங்கள் மற்றும் அசௌகரியங்களைக் குறைக்கிறது. வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்து, படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்க வேண்டும்.

சீரகம்

உணவுப்பொருளான சீரகம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கோடையில் சீரக நீரை உட்கொள்வது உடல் வறட்சியடையாமல் பாதுகாக்க உதவுகிறது. இது வெப்பம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது. வயிற்றுப் பிரச்சனை மற்றும் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு சீரக நீர் மிகவும் உதவிபுரிகிறது. கோடைக்காலத்தில் சீரக நீர் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இது வெளிப்புற பருவத்தில் நம்மை நன்றாக உணர வைக்கிறது.

இந்த விதைகளை எடுத்துக் கொள்வது உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Summer Drink: வெயில் காலத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க இந்த பானத்தை குடியுங்க!

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட பிறகு மூலிகை டீ குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

Disclaimer