$
Ayurvedic Tips To Reduce Body Heat: கோடைக்காலம் என்றாலே பலருக்கும் வெயிலின் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்படுவர். இதில் உடல் வெப்பத்தைத் தணிக்க சில இயற்கையான முறைகளைக் கையாள வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, பித்தம் என்பது உடலின் 3 தோஷங்களில் ஒன்றாகும். பிட்டா ஆனது உடலில் உள்ள ஜீரண சக்தி அல்லது அக்னியை கட்டுப்படுத்துகிறது. பித்தம் கட்டுப்பாட்டை மீறும் போது, வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இதில் பிட்டா சூடான, எண்ணெய் மற்றும் லேசானதாகக் கருதப்படுகிறது. இது வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தலாம். கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைவு காரணமாக வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது. பெரும்பாலானோர் கோடையில் வெயில் உஷ்ணத்தை எதிர்கொள்ள வேண்டி வரலாம். எனவே உடல் சூட்டைத் தணிக்க போதுமான அளவு நீர் குடிப்பது அவசியமாகும். சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் உடல் சூட்டை நீக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Body Heat: உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கா? கூலா வெச்சிக்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் எடுத்துக்கோங்க
உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆயுர்வேத முறைகள்
நீர் நிறைந்த உணவு
உடல் வெப்பத்தைத் தணிக்க போதுமான அளவு நீர் குடிப்பது அவசியமாகும். ஒவ்வொரு நாளும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, நீர்ச்சத்து நிறைந்த உணவை மட்டும் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இதற்கு தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரிக்காய், தேங்காய் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக, சூப், காய்கறி சாறு, கரும்பு சாறு நன்மை பயக்கும்.

சரியான நேரத்தில் உண்ணுதல்
சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருப்பதும், உடல் வெப்பத்தை அதிகரிக்கும் காரணியாக அமையலாம். ஏனெனில், இதன் மூலமே அக்னி உடலில் சரியாக பயன்படுத்தப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் அமைகிறது. இது உடலைக் குளிர்விக்க சாலட்டை உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டும். அந்த வகையில், நெல்லிக்காயை எடுத்துக் கொள்வது உடல் சூட்டைத் தணிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பித்தத்தைக் குறைக்கும் உணவு
உடல் சூடு அல்லது பித்தத்தைக் குறைக்க குளிர்சியான மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வெள்ளரி, நெல்லிக்காய், தர்பூசணி, முலாம்பழம், ப்ரோக்கோலி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், உடல் சூடு தணிவதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Uric Acid: யூரிக் அமில பிரச்சனையைத் தவிர்க்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்
செலரி இலைகள்
இது அதிகளவு நீராதாரம் மிகுந்ததாகும். இது உடலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இது தவிர, செலரி இலைகளில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலிலிருந்து வெப்பத்தை நீக்குவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
வெப்பத்தை அதிகரிக்கும் உணவை தவிர்ப்பது
இந்த வெப்ப காலத்தில் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில் பீட்ரூட், கேரட், இஞ்சி, புளிப்பு உணவுகள், பூண்டு, சிவப்பு மிளகாய் போன்றவை அடங்கும். இது தவிர, இலவங்கப்பட்டை, கிராம்பு, கருமிளகு போன்ற சூடான மசாலா பொருள்களும் உடல் சூட்டை அதிகரிக்கலாம். எனவே இவற்றை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவுவது
குளிர்ச்சியான நீரில் கால்கள் மற்றும் பாதங்களைக் கழுவுவதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்கலாம். இதற்கு ஒரு தொட்டியில் தண்ணீரை நிரப்ப வேண்டும். இதில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, அந்த நீரில் இரண்டு கால்களையும் சுமார் அரை மணி நேரம் இந்த தொட்டியில் மூழ்க வைக்கவும். இது நரம்புகள் வழியாக செல்லும் இரத்தத்தை குளிர்விப்பதுடன், உடல் வெப்பநிலையை குறையும். இதன் மூலம் அதிக வெப்பத்தை உணர்வதை தவிர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Body Pain Remedies: தீராத உடல் வலி நீங்க இத மட்டும் செய்யுங்க போதும்
மோர் அருந்துதல்
இது கோடையில் நீரேற்றத்தைத் தரும் சிறந்த பானமாகும். மோர் குளிர்ச்சித் தன்மை மிக்க பானமாகும். உடல் சூட்டைத் தணிக்க, மோரை அருந்தலாம். மேலும் மோரில் சத்துக்கள் அதிகமிருப்பதால், இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே வெப்பத்தை சமாளிக்க தினமும் ஒரு கிளாஸ் குளிர்ந்த மோர் குடிக்க வேண்டும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் மிகுந்த குளிரூட்டும் தன்மை கொண்ட பானமாகும். இது உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. உடல் சூட்டைத் தணிக்க தேங்காய் தண்ணீர் அருந்தலாம். இது தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நல்ல மூலமாகும். மேலும் இது உடலை குளிர்விக்கிறது. இது தவிர, தேங்காய் எண்ணெயும் உடல் சூட்டை நீக்க வல்லது. தேங்காய் எண்ணெயை கால்களில் தடவலாம். இந்த எண்ணெயை உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் உடலின் வெப்பம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஆயுர்வேத முறைப்படி, உடல் சூட்டைத் தணிக்க நெல்லிக்காய், புதினா, கற்றாழை போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர, தலையை குளிர்ந்த எண்ணெயால் மசாஜ் செய்ய வேண்டும். அதே சமயம் எள், ஆமணக்கு எண்ணெய் போன்ற வெப்பத்தை அதிகரிக்கும் எண்ணெய்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs for Weight Loss: எடையைக் குறைக்கும் சிறந்த ஆயுர்வேத மூலிகைகள்
Image Source: Freepik