Here Is Why You Should Skip Having Your Dinner: நமது ஆரோக்கியத்தை பராமரிக்க, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவேண்டியது அவசியம். குறிப்பாக இரவு உணவு. இரவு உணவை தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் உட்கொள்ள வேண்டும், இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், சாப்பிட்டதும் சிறிது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால், இந்த பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். அத்துடன் உடல் பருமன் ஏற்படும் அபாயமும் குறையும்.
நம்மில் பலர் நேரமின்மை காரணமாக காலை உணவை தவிர்ப்போம். ஆனால், காலை உணவை எப்போதும் ஒரு ராஜாவைப் போல சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது, காலை உணவை முழுமையாக சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை காலை உணவு வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
அதே போல இன்னும் சிலர், இரவு உணவு சாப்பிடுவதை தவிர்ப்போம். இரவு உணவை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சரியாகத்தான் படித்தீர்கள். டயட் என் க்யூர் என்ற உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா காந்தி, இரவு உணவை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கூறியுள்ளார் அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது

நீங்கள் இரவு உணவு உண்ணாமல் இருந்தால், உடலுக்குள் எந்த சத்துக்களும் செல்லாது. இதன் பொருள் உங்கள் கலோரி உட்கொள்ளல் சில நேரங்களில் பூஜ்ஜியமாக மாறும். உடல் பருமனை குறைக்க, கலோரி உட்கொள்ளலை குறைக்க வேண்டும். அதாவது, உங்கள் உடல் எடையை குறைக்க, இரவு உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இது உங்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இது தவிர, நீங்கள் காலை உணவு அல்லது மதிய உணவிற்கு எடுத்துக் கொள்ளும் பொருட்களின் கலோரி எண்ணிக்கையும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
வளர்சிதை மாற்றம் மேம்படும்

இயல்பாக, நமது உடல் பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் ஓய்விலும் இருக்கும். அதாவது, பகலில் நாம் சாப்பிடும் போதும், பானங்கள் பருகும்போதும், செரிமான அமைப்பு சரியாகச் செயல்படும். ஆனால், இரவில் செரிமான செயல்பாடு குறைவாக இருக்கும். இந்நிலையில், இரவு உணவை தவிர்த்தால், அது உங்கள் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு கொடுக்கும். அதே நேரத்தில், காலை உணவு மற்றும் மதிய உணவின் போது இது சீராக வேலை செய்யும்.
அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது

இரவு உணவைத் தவிர்ப்பவர்கள் சரியான நேரத்தில் தூங்குவதையும் காலையில் சரியான நேரத்தில் எழுந்திருப்பதையும் நீங்கள் அடிக்கடி கவனித்திருப்பீர்கள். ஏனென்றால், அவர்களின் உடலின் சர்க்காடியன் கடிகாரம் சரியாக வேலை செய்கிறது. சர்க்காடியன் கடிகாரம் என்பது உடலின் உயிரியல் கடிகாரம், இது நாம் தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை தீர்மானிக்கிறது. அதே போல, இரவில் அதிக நேரம் கண்விழிப்பவர்கள், இரவில் அதிகமாக சாப்பிடுவார்கள். அதிகப்படியான உணவு உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே
நிம்மதியான தூக்கம்

இரவு உணவைத் தவிர்ப்பது உடல் பருமனைக் கட்டுப்படுத்துகிறது. உடல் பருமன் கட்டுப்படும் போது, உடலில் உள்ள அனைத்து ஹார்மோன்களும் சரியாக வேலை செய்யும். இரவில் நல்ல மற்றும் போதுமான தூக்கம் காரணமாக, உங்கள் மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும், இதன் காரணமாக மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் நீங்கும். மொத்தத்தில், இரவு உணவை தவிர்ப்பதால், நல்ல தூக்கம் கிடைக்கும்.
வயிற்று உப்புசம் பிரச்சனை

பெரும்பாலும், இரவுநேர உணவை சாப்பிட்டதும், பலர் தூங்கி விடுவார்கள். இதனால், அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம் பிரச்சினை ஏற்படும். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இந்த பிரச்சினையை தவிர்க்க, தூங்குவதற்கு படுக்கைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும். அதே சமயம் இரவு உணவை தவிர்த்தால், வயிற்று உப்புசம் பிரச்சனையை முற்றிலுமாக நீக்கிவிடலாம். வயிறு உப்புசம் பிரச்சனையால், வாந்தி, குமட்டல் மற்றும் வாயு பிரச்சனைகளும் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஒரு குறிப்பிட்ட டயட்டை கடைபிடிப்பவர்கள், இரவு உணவை தவிர்ப்பார்கள். இதன் மூலம், உடல் எடையை எளிமையாக கட்டுப்படுத்தலாம். ஆனால், ஆரோக்கியத்திற்காக இரவு உணவை நீங்கள் தவிர்க்க விரும்பினால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
- மாலையில் சிற்றுண்டி நேரத்தில் எளிமையான மற்றும் ஆரோக்கியமான பொருட்களை சாப்பிடுங்கள், இதனால் நீங்கள் படுக்கை நேரத்தில் அதிக பசியை உணரமாட்டீர்கள்.
- நீங்கள் ஏற்கனவே எடை குறைவாக இருந்தால், இரவில் லேசான இரவு உணவு சாப்பிடலாம்.
- உங்களுக்கு தைராய்டு அல்லது நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால், இரவு உணவைத் தவிர்க்காதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!
- இரவு உணவிற்குப் பிறகு காலையில் ஆற்றல் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், அடுத்த நாள் முதல் இரவு உணவை தவிர்க்க வேண்டாம்.
- நீங்கள் வழக்கமாக இரவு உணவைத் தவிர்த்து வந்தால், காலையில் ஆரோக்கியமான மற்றும் கனமான உணவை உண்ணுங்கள்.
Pic Courtesy: Freepik