How to make tender coconut with nungu payasam recipe: நம் வீட்டில் பண்டிகைக் காலங்களில் பெரும்பாலும் பலவிதமான இனிப்பு, காரங்களைச் செய்து சாப்பிடுவது வழக்கம். இந்த இனிப்பு வகைகளில் கண்டிப்பாக பாயாசம் இல்லாமல் எந்த ஒரு விருந்தும் இருக்காது. ஆம். உண்மையில் பாயாசம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி அருந்தும் பானமாகும். நம் இந்திய வீடுகளில் பலரும் பாயாசத்தைப் பல்வேறு வழிகளில் செய்வர். பொதுவாக, சேமியா பாயாசம், பாசிப்பயறு பாயாசம் உள்ளிட்ட ஏராளமான பாயாசம் வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுமே சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தையும் தரக்கூடியவையாகும்.
கோடைக்காலத்தில் நம் உடலைக் குளிர்ச்சியாக வைப்பதற்கு பலரும் இனிப்பு நிறைந்த பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், கோடை வெப்பத்தில் உடலில் குளிர்ச்சித் தன்மையை அதிகரிக்க நாம் ஆரோக்கியமான இளநீர், நுங்கு பாயாசம் எடுத்துக் கொள்ளலாம். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் நம் வீட்டிலேயே எளிமையான முறையில் இளநீர் நுங்கு பாயாசம் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தித்திக்கும் சுவையில் அருமையான மக்கானா பாயாசம் ரெசிபி.. எப்படி தயார் செய்யலாம்? இதுல அவ்ளோ நன்மைகள் இருக்கு
இளநீர் நுங்கு பாயாசம்
இளநீர் நுங்கு பாயாசம் என்பது கோடை காலத்தில் உடலை குளிர்விக்கக் கூடிய, இயற்கையாகவே ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இனிப்பான பானமாகும். இந்த இரண்டு பொருள்களுமே இயற்கையான குளிரூட்டிகள் ஆகும். இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், குளிர்ச்சியையும் அளிக்கிறது. மேலும், இதை மிகவும் எளிதாகவும், விரைவாகவும் செய்யலாம்.
முக்கிய கட்டுரைகள்
தேவையான பொருள்கள்
- நுங்கு - 3
- இளநீர் - 1 கப்
- இளநீர் வழுக்கை (Tender Coconut Malai) - அரை கப்
- சர்க்கரை - தேவையான அளவு
- பால் - 1 கப் (காய்ச்சிய பால்)
- ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- பாதாம் அல்லது முந்திரி - சிறிதளவு
இளநீர் நுங்கு பாயாசம் செய்வது எப்படி
- இந்த பாயாசத்தைத் தயார் செய்வதற்கு, முதலில் நுங்குகளை நீரை ஊற்றி கழுவ வேண்டும். பின்பு, இதை மென்மையாக வெட்டி துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு மிக்ஸியில் இளநீர் மற்றும் இளநீர் வழுக்கையைச் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
- பின், பாலை கொதிக்க வைத்து, அது சூடாக இருக்கும் போது, அதில் சர்க்கரை சேர்த்து கலந்து, பின்பு குளிரவைக்கலாம்.
- இப்போது அரைத்த இளநீர் கிரீம் கலவையில் குளிர்ந்த பாலை சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் நறுக்கிய நுங்குத்துண்டுகளைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். இதில் விரும்பினால் ஏலக்காய் பொடியைச் சேர்க்கலாம்.
(இதில் நுங்குவைச் சேர்த்து கிளறும் போது மிக அதிகமாக கிளற வேண்டாம்.)
- அதன் பிறகு, பாலின் மேலே துருவிய பாதாம் மற்றும் முந்திரி சேர்க்கலாம். இதனைக் குறைந்தது 30 நிமிடங்கள் குளிரவைத்து பிறகு பரிமாறலாம். இதில் தேவைப்பட்டால் சில ஐஸ் கட்டிகளைச் சேர்க்கலாம். இப்போது இளநீர் நுங்கு பாயாசம் தயாரானது. இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
இந்த பதிவும் உதவலாம்: Elaneer payasam: தித்திக்கும் சுவையில் ஸ்வீட் இளநீர் பாயாசம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
கோடையில் இளநீர், நுங்கு தரும் நன்மைகள்
- இளநீர் மற்றும் நுங்கு இரண்டுமே நீர்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை கோடைக்காலத்தில் உட்கொள்வது உடலை குளிர்ச்சியடையச் செய்து, வெப்பத்தை தணிக்கிறது. மேலும் இது வெப்பத்தால் ஏற்படும் தாகத்தைத் தணிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கிறது.
- உடலுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இளநீரில் காணப்படுகிறது.எனவே கோடையில் இளநீரை உட்கொள்வதன் மூலம் இந்த தாதுக்களைப் பெறலாம். அதே போல, நுங்குவிலும் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
- கோடைக்காலத்தில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த இளநீர் மற்றும் நுங்கு இரண்டையும் உட்கொள்வது எடையிழப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதற்கு இதில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். இவை செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது.
- இளநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், நுங்கில் காணப்படும் வைட்டமின்கள் தோல் நோய்களைத் தடுக்க உதவுகின்றன
- நுங்கு சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
கோடை வெப்பத்தில் இந்த குளிர்ச்சியான நுங்கு பாயாசத்தை உட்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் வீட்டிலேயே நுங்கு பாயாசம் செஞ்சி குடிங்க.. வெயிலுக்கு குளுகுளுனு இருக்கும்
Image Source: Freepik