தித்திக்கும் சுவையில் அருமையான மக்கானா பாயாசம் ரெசிபி.. எப்படி தயார் செய்யலாம்? இதுல அவ்ளோ நன்மைகள் இருக்கு

How to make makhana payasam recipe: நம் வீட்டிலேயே சுவையான மற்றும் அருமையான மக்கானா பாயாசம் தயார் செய்யலாம். இது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் மக்கானா பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள், செய்முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தித்திக்கும் சுவையில் அருமையான மக்கானா பாயாசம் ரெசிபி.. எப்படி தயார் செய்யலாம்? இதுல அவ்ளோ நன்மைகள் இருக்கு

How to make healthy makhana payasam: இனிப்பு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இனிப்பு வகைகளில் ஒன்றான பாயாசம் இன்று பலரும் விரும்பி அருந்தக்கூடிய பானங்களில் ஒன்றாகும். இந்திய வீடுகளில் ஒவ்வொரு சிறப்பு விருந்திலும் பாயாசத்திற்கு இடமில்லாமல் இருக்காது. அந்த வகையில், இது தனித்துவம் மிக்கது. பாயாசத்தில் ஏராளமான வகைகள் உள்ளன. சேமியா பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம் உள்ளிட்ட பல்வேறு பாயாசம் ரெசிபிகள் உள்ளன. பாயாசத்தில் சேர்க்கப்படக்கூடிய பொருள்களைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அமைகிறது. இவை சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

அவ்வாறு, சற்று வித்தியாசமான வகையில் நம் வீட்டில் எளிமையான முறையில் ஒரு ஆரோக்கியமான பொருளைக் கொண்டு பாயாசத்தைத் தயார் செய்யலாம். அவை வேறு ஒன்றும் இல்லை. மக்கானா தான். ஆம். உண்மையில், நம் அன்றாட உணவில் மக்கானாவைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பலவித நன்மைகளைத் தருகிறது. தாமரை விதைகள் என்றழைக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த மக்கானாவைக் கொண்டு மக்கானா பாயாசத்தைத் தயார் செய்யலாம். இதில் மக்கானா பாயாசம் செய்வதற்கான படிகளையும், மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Elaneer payasam: தித்திக்கும் சுவையில் ஸ்வீட் இளநீர் பாயாசம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

மக்கானா பாயாசம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்

  • மக்கானா - 2 கப்
  • முந்திரி - ஒரு கைப்பிடியளவு (நெய்யில் வறுத்தது)
  • திராட்சை - ஒரு கைப்பிடியளவு
  • ஏலக்காய் - 2
  • பால் - அரை லிட்டர் (காய்ச்சி ஆற வைத்தது)
  • குங்குமப்பூ - கால் ஸ்பூன்
  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை - அரை கப்

மக்கானா பாயாசம் செய்முறை

  • முதலில் கடாய் ஒன்றில் நெய்யை ஊற்றி, மக்கானாவை வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர், சிறிதளவு தாமரை விதைகளை எடுத்து அதை மிக்ஸியில் சேர்த்து, அதில் ஏலக்காய் விதைகள், குங்குமப் பூ, முந்திரி போன்றவற்றையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு ஒரு அகலமான கடாயில் பாலை ஊற்றி, அதில் வறுத்த தாமரை விதைகளை சேர்க்கலாம். இதை சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • தாளிப்பு கரண்டியில் நெய்யை ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
  • பிறகு, அரைத்த முந்திரி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கலக்க வேண்டும். அடுத்ததாக இதில் சர்க்கரை சேர்த்து கிளறலாம்.
  • கடைசியாக, இதில் குங்குமப் பூ மற்றும் வறுத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் கலந்து இறக்கினால், சுவையான மக்கானா பாயாசம் தயாராகி விட்டது.

மக்கானாவின் ஊட்டச்சத்துக்கள்

மக்கானாவின் நன்மைகளைப் பார்க்கும் முன்னால், அதில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களைக் காணலாம். மக்கானாவில் அதிக நார்ச்சத்துக்களும், குறைந்த அளவிலான கலோரிகளும் நிறைந்து காணப்படுகிறது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. கூடுதலாக, இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் தயிருடன் மக்கானாவை சேர்த்து சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை மேலாண்மைக்கு

எடை ஆரோக்கியத்தை நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு மக்கானா ஒரு சிறந்த தேர்வாகும். இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளதால், இவை வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலையும் குறைக்கிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தி, அதிகப்படியான உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது.

தசை வளர்ச்சிக்கு

மக்கானாவில் உள்ள அதிக புரத உள்ளடக்கம், தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைக்கவும், தசை வெகுஜனத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இது நல்ல அளவிலான தாவர அடிப்படையிலான புரதத்தை வழங்குகிறது. எனவே இது கூடுதல் கலோரிகள் இல்லாமல், தசை வளர்ச்சியை ஆதரிக்க ஏதுவாக அமைகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

மக்கானா குறைந்த அளவிலான கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்டதாகும். எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சிற்றுண்டியாக அமைகிறது. மேலும் இதில் உள்ள மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய தாளத்தைக் கட்டுப்படுத்தவும், மற்றும் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

வலுவான எலும்புகளை பராமரிப்பதில் மக்கானா பெரிதும் நன்மை பயக்கும். இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நிலைமைகளைச் சமாளிப்பதற்கு உதவுகிறது. இதற்கு இதில் உள்ள கணிசமான அளவிலான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளடக்கமே காரணமாகும். இவை எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிக்க அவசியமாகும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் பாலில் ஊறவைத்த மக்கானாவை சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Benefits of Barley Roti: கோடையில் பார்லி ரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..

Disclaimer