Thu Oct 29, 2026 | 10:50 AM IST

Rice Payasam Recipe: ஒரு கப் பச்சரிசி இருந்தால் போதும் அட்டகாசமான பாயாசம் செய்யலாம்!

ஆரோக்கியம் நிறைந்த மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பச்சரிசி பாயசம் பாயாசம் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
Rice Payasam Recipe: ஒரு கப் பச்சரிசி இருந்தால் போதும் அட்டகாசமான பாயாசம் செய்யலாம்!Rice Payasam Recipe: ஒரு கப் பச்சரிசி இருந்தால் போதும் அட்டகாசமான பாயாசம் செய்யலாம்!

Instant Rice Payasam In Tamil: கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், பூஜை என எதுவாக இருந்தாலும் நாம் பாயாசம் செய்வது வழக்கம். மத்திய உணவு சாப்பிட்டுவிட்டு, கடையில் ஒரு அப்பளத்தை நொறுக்கி போட்டு பாயாசத்தை ஊற்றி சாப்பிட்டால் அடஅடஅட சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. பாயாசம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சேமியா பாயாசம், பாசி பருப்பு பாயாசம், பாசி பயறு பாயாசம், பச்சை பயறு பாயாசம், இளநீர் பாயாசம் என பல வகையான பாயாசத்தை நாம் செய்திருப்போம். என்னதான் அனைவரும் பாயாசம் செய்தாலும் ஒவ்வொருவரின் செய்முறையும் கை பக்குவமும் மாறுபடும். அந்தவகையில், மிகவும் ஆரோக்கியமான மற்றும் தித்திப்பான பச்சரிசி பாயசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Green Gram Paniyaram: ஒரு கப் பச்சை பாசிப்பயறு இருந்தால் போதும் சுவையான பணியாரம் தயார்!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
பால் - 1 லிட்டர்
கன்டென்ஸ்டு மில்க் - 200 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
திராட்சை - 8
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
குங்கும பூ - ஒரு சிட்டிகை

பச்சரிசி பாயசம் செய்முறை:

Easy Rice Kheer Recipe (Indian Rice Pudding) + VideoEasy Rice Kheer Recipe (Indian Rice Pudding) + Video

  • பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 2 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும்.
  • இதையடுத்து, கடாயில் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • பால் அளவு பாதியாக குறைந்த பின் வேகவைத்த பச்சரிசியை போட்டு கிளறவும்.
  • இதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.
  • தாளிப்பு கரண்டில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுக்கவும்.
  • பால் நன்கு கொதித்து சுண்டும் பொழுது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் பச்சரிசி பாயசம் தயார்.

இந்த பதிவும் உதவலாம்: Javvarisi kichadi recipe: மஹா சிவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி கிச்சடி ரெசிபி! அருமையான சுவையில் இப்படி செய்யுங்க

பச்சரிசி பாயசம் சாப்பிடுவதன் நன்மைகள்:

குளிர்ச்சியூட்டும் விளைவு: கீரில் பால் மற்றும் அரிசியின் கலவையானது குளிர்ச்சியான உணர்வை அளிக்கிறது. இது வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாக அமைகிறது மற்றும் உடல் வெப்பநிலையை நிர்வகிக்க உதவுகிறது.

குடல் ஆரோக்கிய மேம்பாடு: அரிசியில் உள்ள ஸ்டார்ச் செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது மற்றும் குடலில் வீக்கத்தைக் குறைக்கிறது.

ஆற்றல் அதிகரிப்பு: அரிசியிலிருந்து வரும் கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றலை வழங்குகின்றன. இது கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது கிளைகோஜன் கடைகளை நிரப்புவதற்கு உதவியாக இருக்கும்.

Rice KheerRice Kheer

இந்த பதிவும் உதவலாம்: Ragi Ela Ada Recipe: ஒரு கப் ராகி மாவு இருந்தால் போதும் கேழ்வரகு இலை அடை தயார்!

சத்து நிறைந்தது: கீரில் உள்ள பால் அத்தியாவசிய புரதம் மற்றும் கால்சியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதே நேரத்தில் அரிசி அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கிறது.

உணவுத் தழுவலுக்கான சாத்தியம்: தயாரிப்பைப் பொறுத்து, கீரை குறைந்த கொழுப்புள்ள பால், இயற்கை இனிப்புகள் மற்றும் கொட்டைகள் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளுடன் தயாரிக்கலாம். இது உணவு கட்டுப்பாடுகள் உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது (சுகாதார நிபுணரை அணுகவும்).

Pic Courtesy: Freepik

Read Next

→ அதிகப்படியான உப்பு ஏன் ஆபத்தானது?... ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.