How to make Poha Nuggets Recipe at Home: மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு நாம் எப்போதும் புதிய புதிய ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கவே விரும்புவோம். ஆனால், செய்த உணவையே மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கும், சாப்பிடுபவர்களுக்கும் சலித்து போய்விடும்.
அந்தவகையில், ஆரோக்கியத்திற்கு நல்லது என கருதப்படும் அவலை வைத்து ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். நம்மில் பெரும்பாலானோர் சமைக்க நேரம் இல்லாத நேரத்தில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவோம். இந்த முறை அதையே கொஞ்சல் ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடலாம். வாருங்கள் கேழ்வரகு இலை அடை செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Green Gram Paniyaram: ஒரு கப் பச்சை பாசிப்பயறு இருந்தால் போதும் சுவையான பணியாரம் தயார்!
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
கேழ்வரகு மாவு - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
சுடு தண்ணீர்
துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
கேழ்வரகு இலை அடை செய்முறை:
- பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு சிறிது சிறிதாக சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவு திரண்டு வந்த பின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து10 நிமிடம் ஊறவிடவும்.
- மற்றோரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
- வாழையிலையை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- பின்பு அதில் எண்ணெய் தடவி தயார் செய்த மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி இலையில் வைத்து தட்டையாக தட்டி கொள்ளவும்.
- பிறகு தயார் செய்த பில்லிங்கை வைத்து இலையை மூடவும்.
- இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பின்பு தயார் செய்த அடையை வைத்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
- அருமையான கேழ்வரகு இலை அடை தயார்!
கேழ்வரகு இலை அடை பயன்கள்:
பசையம் இல்லாதது: பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு கோதுமை மாவுக்கு மாற்றாக ராகி உள்ளது.
கால்சியம் நிறைந்தது: ராகி கால்சியத்தின் நல்ல மூலமாகும். இது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவும்.
எடை இழப்பு: ராகியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணரவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
புரதம் அதிகமாக உள்ளது: ராகி தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல மூலமாகும். இது தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க உதவும்.
நீரிழிவு மேலாண்மை: ராகியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும்.
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது: ராகியில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: ராகியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Javvarisi kichadi recipe: மஹா சிவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி கிச்சடி ரெசிபி! அருமையான சுவையில் இப்படி செய்யுங்க
இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது: ராகியில் இரும்பு மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது இரத்த சோகையைத் தடுக்க உதவும்.
சருமத்தை மேம்படுத்துகிறது: ராகியில் வைட்டமின் சி உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.
தலைவலி, தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வை நீக்கும்: ராகியில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது தலைவலி, தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவும்.
Pic Courtesy: Freepik