How to make Mushroom Green Masala Recipe: எப்படி சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாதோ…. அதே போல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது. சிக்கனுக்கு நிகரான ஊட்டச்சத்துக்கள் காளானில் உள்ளது. அசைவ விரும்பிகளின் வீட்டில் மட்டன், சிக்கன் வாசனை வருமோ…. அதே போல சைவ விரும்பிகளின் வீட்டில் காளான் ரெசிபிகள் நிறைந்திருக்கும்.
எப்பவும் காளானை வைத்து ஒரே மாதரி பிரியாணி, கிரேவி என செய்பவரா நீங்க? ஏதாவது இந்த முறை காளானை வைத்து புதியதாக செய்ய விரும்புபவராக நீங்கள் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது. வாருங்கள், ஹோட்டல் ஸ்டைல் காளான் க்ரீன் மசாலா எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என அனைத்து விதமாக உணவுக்கும் தோதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Skipping Breakfast: காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு ஆபத்து தெரியுமா? தீமைகள் இங்கே!
தேவையான பொருட்கள் :
காளான் - 400 கிராம்.
பெரிய வெங்காயம் - 2.
தக்காளி - 2
புதினா - ஒரு கொத்து
கொத்த மல்லி இலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
ஏலக்காய் துண்டுகள் - 4
இஞ்சி - சிறிதளவு
கரம் மசாலா - சிறிது.
பிரியாணி இலை - 1
கிராம்பு - 1
பட்டை - 1
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
சோம்பு - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
காளான் கிரீன் கிரேவி செய்முறை:

- மஷ்ரூம் மசாலா தயாரிக்க முதலில் தேவையான மசாலாவை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதாவது, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், ஆகியவற்றை தூசி நீக்கி கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு, இஞ்சி ஆகியவரை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் போட்டு, அதன் உடன் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மஷ்ரூமை போட்டு சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Sugar Cravings: தண்ணீர் குடிப்பது உண்மையில் இனிப்பு சாப்பிடும் ஆசையை குறைக்குமா?
- பின் அதே கடாயில் மேலும் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கி போட வேண்டும்.
- இது நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருந்த மசலாவை போட்டு வதக்க வேண்டும்.
- பின்னர் அதனை மூடி வைத்து மூட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து அதனை திறந்து அதனுள் வதக்கி வைத்திருந்த மஷ்ரூமை போட வேண்டும்.
- இதனை 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விட வேண்டும். பின்னர், இறுதியாக ஒரு பச்சை மிளகாய், கரம் மசாலா போட்டு இறக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Selavu Rasam: தக்காளி ரசம் தெரியும்.. அது என்னப்பா செலவு ரசம்? இதோ ரெசிபி!
காளான் சாப்பிடுவதன் நன்மைகள்:

கலோரிகள் குறைவு
காளான்களில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை குறைவாக உள்ளது. மேலும், அவை கொலஸ்ட்ரால் இல்லாதவை.
சத்துக்கள் நிறைந்தது
பொட்டாசியம், செலினியம், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் வைட்டமின் டி உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாக காளான் உள்ளது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
காளான்களில் செலினியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. இவை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Mushroom Benefits: காளான் வகைகளும், ஆரோக்கிய நன்மைகளும்!
குறைந்த இரத்த அழுத்தம்
காளான்கள் பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
எடை இழப்புக்கு ஆதரவு
காளான் நிறைந்த உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்து எடையைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும்
ஒரு வாரத்தில் இரண்டு கப் காளான்களுக்கு மேல் சாப்பிடும் பங்கேற்பாளர்கள் லேசான அறிவாற்றல் குறைபாடு (MCI) வளரும் அபாயம் 50% குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Viral Tomato Chutney: வெறும் 5 நிமிடம் போதும் சுவையான வைரல் தக்காளி சட்னி ரெடி!
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
காளானில் உங்கள் நுண்ணுயிரியை சமநிலைப்படுத்தவும், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தூண்டவும் உதவும் பொருட்கள் உள்ளன.
Pic Courtesy: Freepik